சினிமாவில் ரீல் ஜோடிகளாக நடித்து பின்னர் காதல் திருமணம் செய்து ரியல் ஜோடிகளான நட்சத்திரங்கள் ஏராளம். அந்த வகையில் நடிகர் அஜித் - நடிகை ஷாலினி, நடிகர் சூர்யா - நடிகை ஜோதிகா, நடிகை நயன்தாரா - இயக்குனர் விக்னேஷ் சிவன், அதேபோல் பாலிவுட்டில் நடிகை கஜோல் - நடிகர் அஜய் தேவ்கன், நடிகர் ரன்வீர் சிங் - நடிகை தீபிகா படுகோன், நடிகை கத்ரீனா கைப் - நடிகர் விக்கி கவுஷல், நடிகர் ரன்பீர் கபூர் - நடிகை ஆலியா பட் என இந்த லிஸ்ட் நீண்டுகொண்டே செல்கிறது.
அந்த லிஸ்ட்டில் விரைவில் மேலும் ஒரு ஜோடி இணைய உள்ளது. அவர்கள் யார் என்றால் பிரபல பாலிவுட் நடிகை கியாரா அத்வானியும், பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்கோத்ராவும் தான். இவர்கள் இருவரும் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக பாலிவுட் வட்டாரத்தில் தகவல் வெளியாகி உள்ளது. இந்த திருமணத்தில் கலந்துகொள்ள பிரபலங்கள் யாருக்கும் அழைப்பு விடுக்காமல், இருவரது குடும்பத்தினர் முன்னிலையில் சிம்பிளாக இவர்களது திருமணம் நடக்க இருப்பதாகவும் தகவல் பரவி வருகிறது.
இதையும் படியுங்கள்... மூன்று வேடங்களில் நடிக்கும் தனுஷ் பட வில்லன் டோவினோ தாமஸ்! பான் இந்தியா திரைப்படமாகவும் உருவாகியது!
நடிகை கியாரா அத்வானி தற்போது ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ஆர்.சி.15 படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இப்படத்தில் அவர் நடிகர் ராம்சரணுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இதுதவிர ஷங்கர் இயக்க உள்ள அந்நியன் படத்தின் இந்தி ரீமேக்கிலும் ரன்வீர் சிங்கிற்கு ஜோடியாக நடிக்க கியாரா அத்வானி கமிட் ஆகி உள்ளார். மறுபுறம் சித்தார்த் மல்கோத்ராவும் பாலிவுட்டில் பிசியான நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... Thunivu : பொங்கல் விருந்தாக வரும் துணிவு... தியேட்டர் லிஸ்ட் உடன் போஸ்டர் ஒட்டி மாஸ் காட்டிய அஜித் ரசிகர்கள்