ரஜினிகாந்த் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள படம் கூலி. இப்படம் நாளை உலகமெங்கும் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரையும் பற்றி பேசினார் ரஜினி. அவரின் பேச்சு கடும் விமர்சனத்துக்குள்ளானது. ஏனெனில் அதில் கலந்துகொண்ட சோபின் சாஹீர் வழுக்கை தலையோடு இருப்பதாக சுட்டிக்காட்டி பேசி இருந்தார். ரஜினியின் இந்த பேச்சுக்கு நெட்டிசன்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. சீனியர் நடிகராக இருந்துகொண்டு ரஜினியே இப்படி பேசலாமா என விமர்சனங்களும் எழுந்தன.
24
ரஜினியை விமர்சித்த ப்ளூ சட்டை மாறன்
இந்த நிலையில், சர்ச்சைக்குரிய யூடியூப் விமர்சகரும், இயக்குனருமான ப்ளூ சட்டை மாறன், ரஜினியின் இந்த செயலை கடுமையாக விமர்சித்து இருக்கிறார். இதுகுறித்து அவர் போட்டுள்ள பதிவில், “எனக்கு வில்லன் சோபின் சாஹீர் என லோகேஷ் கூறினார். என்னடா இது.. வழுக்கை தலையாக இருக்கிறாரே.. யார் இவர்? எனக்கு எப்படி வில்லனாக நடிப்பார் என்று யோசித்தேன். மஞ்சும்மல் பாய்ஸ் படத்தில் சிறப்பாக நடித்துள்ளார் என கூறியதால் தான் ஓகே சொன்னேன் - கூலி ட்ரைலர் வெளியீட்டில் தலீவர் பேசியது” என்பதை சுட்டிக்காட்டிய ப்ளூ சட்டை மாறன், அவருக்கு சரமாரி கேள்விகளையும் எழுப்பி உள்ளார்.
34
முடியை நம்பி சோபின் நடிப்பதில்லை
மேலும் அவர் போட்டுள்ள பதிவில், “75 வயதிலும் நீங்கள் டோப்பா வைத்துதான் நடிக்கிறீர்கள். ஆனால் முடியை நம்பி சோபின் நடிப்பதில்லை. தனது நடிப்பை மட்டுமே நம்புகிறார். வயது 41. Iyobinte Pusthagam, Sudani from Nigeria, Kumbalangi Nights போன்ற படங்களை பார்த்திருந்தால் இவர் யாரென்று தெரிந்திருக்கும். ஃபஹத் ஃபாசில் நடிக்க வந்தபோது அவருக்கு தலைமுடி குறைவாக இருந்ததை பலர் கிண்டல் செய்தனர். செஞ்சிட்டு போங்க. நடிப்புல நான் யாருன்னு காட்டறேன் என சவால் விட்டு இன்றுவரை விக் வைக்காமல் நடித்து இந்தியாவின் சிறந்த நடிகர்களில் ஒருவராக உயர்ந்துள்ளார். அவருக்கு வயது 43” என குறிப்பிட்டுள்ளார் ப்ளூ சட்டை மாறன்
இறுதியாக ரஜினிக்கு சவால் ஒன்றையும் விட்டுள்ளார் ப்ளூ சட்டை மாறன். அதன்படி, உங்களுக்கு தில் இருந்தால் டோப்பா இல்லாமல் நடியுங்கள் ரஜினி என பதிவிட்டிருக்கிறார். அதேபோல் மற்றவர்களை குறைத்து மதிப்பிட வேண்டாம் எனவும் கோரிக்கை வைத்துள்ளார். ப்ளூ சட்டை மாறனின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. இதைப்பார்த்த ரஜினி ரசிகர்கள், அவர் வழுக்கை தலை என சொன்னதை மட்டும் பார்க்காமல், அவரையும், அவரது நடிப்பையும் பாராட்டி பேசியதையும் சொல்லுங்கள் என பதிலடி கொடுத்து வருகிறார்கள். ஒரு சிலரோ, வலிமை படம் வந்தபோது ப்ளூ சட்டை மாறன் அஜித்தை உருவ கேலி செய்ததை குறிப்பிட்டு நீங்க மட்டும் இப்படி பேசலாமா என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.