தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சினேகா. இவரின் சிரிப்புக்கென தனி ரசிகர் கூட்டமே இருந்தது. இதனால் இவரை ரசிகர்கள் செல்லமாக புன்னகை அரசி என அழைத்தனர். நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட சினேகாவுக்கு ஒரு மகன், ஒரு மகள் இருக்கிறார்கள். நடிகை சினேகா சினிமாவை தாண்டி பிசினஸிலும் பிசியாக இருக்கிறார். இதனிடையே தன்னுடைய வீட்டில் அம்மன் பூஜையை பிரம்மாண்டமாக நடத்தி இருக்கிறார் சினேகா. அவர் வீட்டு பூஜையில் ஏராளமான திரைப்பிரபலங்களும் கலந்துகொண்டிருக்கிறார்கள். அதன் புகைப்படத் தொகுப்பை தற்போது பார்க்கலாம்.
27
அம்மன் பூஜையில் அனிதா விஜயகுமார்
நடிகை சினேகா வீட்டில் நடைபெற்ற அம்மன் பூஜையில் நடிகர் விஜயகுமாரின் மகளும், நடிகர் அருண் விஜய்யின் உடன்பிறந்த சகோதரியுமான டாக்டர் அனிதா விஜயகுமார் கலந்துகொண்டார். பட்டுப் புடையில் இருவரும் அம்மன் போல் மங்களகரமாக போஸ் கொடுத்தபோது எடுத்த புகைப்படம் இது.
37
பிரசன்னா உடன் அனிதா
நடிகை சினேகாவின் கணவர் பிரசன்னா தான் இந்த பூஜைக்கான ஏற்பாடுகளை தடபுடலாக செய்திருக்கிறார். அவருடன் அனிதா விஜயகுமார் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் இது.
நடிகையும், இயக்குனர் ஹரியின் மனைவியுமான ப்ரீத்தாவும் இந்த அம்மன் பூஜையில் கலந்துகொண்டார். அப்போது சினேகாவின் சகோதரி மற்றும் தன்னுடைய சகோதரியான அனிதா விஜயகுமார் ஆகியோருடன் சேர்ந்து அவர் எடுத்துக் கொண்ட க்யூட்டான போட்டோ இது.
57
தனுஷ் சகோதரி கார்த்திகா
சினேகா வீட்டு அம்மன் பூஜையில் நடிகர் தனுஷின் சகோதரி கார்த்திகாவும் கலந்துகொண்டார். இவரும் ஒரு மருத்துவர் தான். இந்த நிகழ்வில் அவர் அனிதா விஜயகுமார் மற்றும் ப்ரீத்தா ஹரி உடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.
67
அருண் விஜய் மனைவி ஆர்த்தி
நடிகர் அருண் விஜய்யின் மனைவி ஆர்த்தியும் இந்த அம்மன் பூஜையில் கலந்துகொண்டார். பட்டுப்புடவையில் ஜொலிக்கும் அவர், தன்னுடைய அண்ணி அனிதா விஜயகுமார் உடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் இது.
77
சினேகாவை பாராட்டிய அனிதா
இதுகுறித்து அனிதா விஜயகுமார் போட்டுள்ள பதிவில், சினேகா வீட்டில் ஒரு தெய்வீகமான மற்றும் அழகான மாலைப் பொழுதை கழித்தேன். ஒவ்வொரு வருடமும், அவள் அம்மனுக்குச் செய்யும் அர்ப்பணிப்பும், அவள் கையால் செய்யும் அலங்காரங்களும் என்னைக் கவர்கின்றன. கடவுள் உன்னை ஆசீர்வதிப்பார் என்று குறிப்பிட்டுள்ளார்.