பிக்பாஸ் நிகழ்ச்சி நான்காவது வாரத்தை எட்டியுள்ளநிலையில், தற்போது பிரச்சனைகள் அனல் பறக்க துவங்கியுள்ளது. எனவே இது நாள் வரை ரசிகர்கள் எதிர்பார்த்த பல பிரச்சனைகள் இனி வரும் வாரங்களில் நடக்கும் என எதிர்பார்க்கலாம்.
அதே போல், வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் பிரபலமானவர்களை மட்டுமே போட்டியாளர்களாக விளையாட வைக்காமல், பல்வேறு கஷ்டங்களை கடந்து தங்களது துறையில் வளர்ந்துள்ள கானா பாடகி, கூத்து பட்டறை கலைஞர்கள், ஆகியோரும் கலந்து கொண்டு விளையாடி வருகிறார்கள்.
நாளுக்கு நாள் விறுவிறுப்பாகி கொண்டே செல்லும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடி வரும் போட்டியாளர்கள் ஒரு நாளைக்கு எவ்வளவு சம்பளம் பெறுகிறார்கள் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் வீட்டில் முதல் போட்டியாளராக அடியெடுத்து வைத்த, கானா பாடகியான இசை வாணி ஒரு நாளைக்கு சம்பளமாக ரூ. 1 லட்சம் ரூபாய் பெருகிறாராம்.
இவரை தொடர்ந்து, மற்றொரு போட்டியாளரான சின்னத்திரை நடிகர் ராஜு ஜெயமோகன், ஒரு நாளைக்கு சம்பளமாக ரூ. 1.5 லட்சம் பெருகிறாராம்.
ஜெர்மனி நாட்டில் இருந்து கலந்து கொண்டுள்ள ஃபேஷன் டிசைனர் மற்றும் மாடலுமான மதுமிதா ஒரு நாளைக்கு சம்பளமாக ரூ. 2.5 லட்சம் வாங்குகிறாராம்.
கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய யூடியூப் விமர்சகர் அபிஷேக் ராஜா ஒரு நாளைக்கு சம்பளமாக ரூ. 1.75 லட்சம் பெற்று வந்தாராம்.
பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல் திருநங்கை போட்டியாளரான நமீதா மாரிமுத்துவுக்கு மிகப்பெரிய ஆதரவு இருந்தும் திடீர் என முதல் வாரமே வெளியேறினார். இவர் ஒரு நாளைக்கு ரூ. 1.75 லட்சம் சம்பளம் பெற்றுள்ளார்.
அதே போல், விஜய் டிவி தொகுப்பாளியான பிரியங்கா தேஷ்பாண்டே, ஒரு நாளைக்கு மட்டும் சம்பளமாக ரூ. 2 லட்சம் பெருகிறாராம். இவரால் பிக்பாஸ் வீடு கலகலப்பாக சென்று கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
பழம்பெரும் நட்சத்திர ஜோடிகளான, காதல் மன்னன் ஜெமினி கணேசன் மற்றும் சாவித்திரி ஆகியோரின் பேரன் என்கிற அடையாளத்தோடு நடிகராக அறிமுகமாகி இப்போது பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டுள்ள அபிநய் ஒரு நாளைக்கு சம்பளமாக 2.75 லட்சம் பெருகிறாராம். இவர் தான் எல்லோரை விடவும் அதிக சம்பளம் வாங்கும் போட்டியாளராக உள்ளார்.
விஜய் டிவி சீரியல்கள் மூலம் பிரபலமான நடிகை பாவனி ரெட்டி, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்காக ஒரு நாளைக்கு ரூ. 1.25 லட்சம் சம்பளம் வாங்குகிறாராம்.
அதே போல், பல திரைப்படங்களில் பின்னணி பாடகியாகவும், நாட்டுப்புற கலைகளை வளர்க்க தன்னால் முடிந்த முயற்சியை எடுத்து வரும் சின்னப்பொண்ணு - ரூ. 1.5 லட்சம் சம்பளம் வாங்குகிறாராம்.
முதல் வாரத்திலேயே பிக்பாஸ் இருந்து குறைத்த ஓட்டுகள் பெற்றதால் வெளியேறிய மலேசிய மாடலும், சமூக வலைதள பிரபலமுமான நாடியா சங் - ரூ. 2 லட்சம் சம்பளமாக பெற்றுள்ளார்.
பிரபல தயாரிப்பாளரும், தொழிலதிபருமான ஐசரி கணேஷின் குடும்பத்தில் இருந்து, பிக்பாஸ் போட்டிக்கு வந்துள்ள வருண் - ரூ. 1.25 லட்சம் சம்பளம் பெறுகிறார்.
காமெடி நிகழ்ச்சி மூலம் பிரபலம் ஆகி, தற்போது பல திரைப்படங்களில் காமெடி வேடத்திலும், குணச்சித்திர வேடத்திலும் நடித்து வரும் இமான் அண்ணாச்சி ரூ. 1.75 லட்சம் சம்பளமாக பெறுகிறார்.
நடிகையும், மாடலுமான அக்ஷரா ரெட்டி, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ரூ.1 லட்சம் சம்பளமாக பெறுவதாக தெரியவந்துள்ளது.
மாடலிங் என்கிற ஒரு துறை உள்ளது என்பதே தெரியாமல், உள்ளே வந்து தற்போது மடலிங்கில் கலக்கி வரும் சுருதி - ஒரு நாளைக்கு சம்பளமாக ரூ. 70,000 பெறுகிறார்.
மருத்துவரும், பாப் சிங்கருமான ஐக்கி பெர்ரி ரூ.70,000, கூத்து பட்டறையில் இருந்து வந்திருக்கும் தாமரைச்செல்வி - ரூ.70,000 மற்றும் மாஸ்டர் பட நடிகர் சிபி - ரூ.70,000, யாஷிகாவின் முன்னாள் காதலர் நிரூப் - ரூ.70,000 ஆகிய அனைவருக்குமே ஒரு நாளைக்கு 70 ஆயிரம் மட்டுமே சம்பளமாக வழங்கப்படுகிறது.