முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் துர்கா ஸ்டாலினை திடீர் என சந்தித்த சௌந்தர்யா ரஜினிகாந்த்! ஏன் தெரியுமா?

First Published | Oct 27, 2021, 3:40 PM IST

கோலிவுட் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் (Soundarya Rajinikant), திடீர் என தமிழக முதல்வர் ஸ்டாலின் (Mk Stalin) மற்றும் அவரது துணைவியார் துர்கா ஸ்டாலினை (durga Stalin)  சந்தித்து பேசியுள்ளார். ஏன் இந்த திடீர் சந்திப்பு நிகழ்ந்தது என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

ஆன்லைன் தேவை அதிகரிக்க அதிகரிக்க, பலர் புதிய செயலியை உருவாக்குவதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். அந்த வகையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் அக்டோபர் 25 ஆம் தேதி புதிய செயலி ஒன்றை அறிமுகம் செய்துள்ளார்.

இந்தியாவின் முதல் குரல் அடிப்படையிலான சமூக ஊடக தளமாக இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 'hoote' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த செயலியை, சன்னி போக்கலா என்பவருடன் இணைந்து சௌந்தர்யா ரஜினிகாந்த் துவங்கியுள்ளார்.

Tap to resize

இதனை ரஜினிகாந்த் தன்னுடைய சொந்த குரலில் முதல் பதிவை போட்டு துவங்கி வைத்தது தனி சிறப்பு என்றே கூறலாம்.

இந்த செயலி மூலம், மக்கள் எழுத்து மூலமாக கூற வரும் தகவலை அவர்களது குரலில்... எந்த மொழியில் வேண்டுமானாலும் தெரிவிக்கலாம். இது வயதானவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 'hoote ' ஆப் துவங்கி இரண்டு நாட்களே ஆகும் நிலையில், இன்று ரஜினிகாந்த் மகள் திடீர் என தமிழக முதலமைச்சர்  முக ஸ்டாலினையும், அவரது துணைவியாரையும் சந்தித்து பேசியுள்ளார்.

இந்த சந்திப்பின் போது, தான் துவங்கியுள்ள'  Hoote’   App.ஐ  பற்றி விவரித்து, அதன் பயன்களையும் கூறியுள்ளார். மேலும் முதல்வரை சந்தித்து வாழ்த்துகளை பெற்றதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் என சௌந்தர்யா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!