இந்நிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த, ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த 169 பேர் சுயேட்சையாக தேர்தலில் களம் கண்டனர். இதில் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 129 பேர் வெற்றி பெற்றது, அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. எனவே விஜயின் நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் விஜய் அரசியலுக்கு வர இதுவே சரியான நேரம் என, தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் தங்களுடைய கருத்தை தெரிவித்து வருவதையும் பார்க்க முடிகிறது.