பிக்பாஸ் ஷிவானிக்கு சிறந்த அறிமுகத்தை கொடுத்தது சீரியல்கள் தான் என்றாலும், தற்போது வெள்ளித்திரை பட வாய்ப்புகளை கைப்பற்றுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.
தன்னிடம் கதை கூற வரும் இயக்குனர்கள் படங்களில் எல்லாம், வாய்ப்பு கிடைக்கிறதே... என நடித்து விடாமல், தன்னுடைய அறிமுக படமே, முன்னணி நடிகருடன் தான் இருக்க வேண்டும் என பொறுமையாக காத்திருந்தார்.
இவரது பொறுமைக்கு கை மேல் கிடைத்த பலனாக, தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் 'விக்ரம்' படத்தில் விஜய் சேதுபதிக்கு ஹீரோயினாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது.
இந்த தகவலை உறுதி செய்யும் விதமாக ஷிவானி, விஜய் சேதுபதியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படமும் வைரலானது. மேலும் பல இயக்குனர்கள் இவரிடம் கதை கூறி வருவதாகவும் விரைவில் மற்ற சில படங்களிலும் ஷிவானி கமிட் ஆவார் என அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
ஆனால் விக்ரம் படத்தை தவிர வேறு எந்த படத்திலும் இதுவரை ஷிவானி ஒப்பந்தம் செய்யப்பட்டதாக எந்த தகவலும் வெளியாகவில்லை. மேலும் சமீப காலமாக சேலை மற்றும் கண் கூசாத அளவிற்கு கவர்ச்சி காட்டி வந்த ஷிவானி தற்போது மீண்டும் கவர்ச்சி குளத்தில் குதித்துள்ளார்.
படு ஹாட்டான சிவப்பு நிற ஸ்லீவ் லேஸ் உடையில்... உள்ளாடை தெரியும் படி நெஞ்சை நிமிர்த்தி போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.