கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் வருகிற அக்டோபர் 9-ந் தேதி தொடங்க உள்ளது. இதுவரை முடிந்துள்ள 5 சீசன்களும் அமோக வரவேற்பை பெற்ற நிலையில், 6-வது சீசனும் ரசிகர்களை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிக்பாஸ் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது அதில் வரும் ஆடம்பரமான வீடு தான். அந்த வகையில் இந்த முறை மிக பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள பிக்பாஸ் வீட்டின் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.
நுழைவு வாயில்
பிக்பாஸ் வீடு என்றாலே பிரம்மாண்டம் தான் என்பதை உணர்த்தும் விதமாக பிக்பாஸ் 6 நிகழ்ச்சிக்காக வடிவமைக்கப்பட்டுள்ள வீட்டின் நுழைவு வாயிலும் மிகவும் பிரம்மாண்டமாகவே உள்ளது.
நீச்சல் குளம்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனிலும், இரண்டாவது சீசனிலும் மட்டுமே நீச்சல் குளம் பயன்பாட்டில் இருந்தது. பின்னர் மூன்றாவது சீசன் நடைபெற்ற சமயத்தில் தமிழ்நாட்டில் தண்ணீர் பிரச்சனை இருந்ததால் அங்குள்ள நீச்சல் குளத்தில் தண்ணீர் நிரப்பப்படாமல் இருந்தது. பின்னர் 4 மற்றும் 5-வது சீசன்கள் நடைபெற்ற சமயத்தில் கொரோனா பரவல் இருந்ததன் காரணமாக நீச்சல் குளமே இல்லாமல் நடத்தப்பட்டது. தற்போது 6-வது சீசனுக்காக மீண்டும் நீச்சல் குளத்தை வைத்துள்ளனர்.
படுக்கை அறை
பிக்பாஸ் வீட்டில் எப்போதுமே ஆண்களுக்கு தனியாகவும், பெண்களுக்கு தனியாகவும் படுக்கை அறை இருக்கும். இந்த சீசனிலும் அதேபோல் உள்ளது. இரண்டு அறைகளும் வெவ்வேறு நிற படுக்கைகளை கொண்டுள்ளது.
லிவ்விங் ஏரியா
பிக்பாஸ் வீட்டில் உள்ள லிவ்விங் ஏரியாவில் தான் பிரம்மாண்ட சோபா இடம்பெற்று இருக்கும். அங்குள்ள அகம் டிவி வழியாக தான் போட்டியாளர்களுடன் கமல்ஹாசன் கலந்துரையாடுவார். அதேபோல் லிவ்விங் ஏரியா அருகே டைனிங் டேபிளும் இடம்பெற்று உள்ளது.
பாத்ரூம்
பாத்ரூம் ஏரியா மிகவும் கலர்ஃபுல்லாக உள்ளது. கண்ணாடிகள், பாத்ரூம், வாஷ் பேசின், சோபா உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. இதன் டிசைனும் கண்ணைக்கவரும் வண்ணம் உள்ளது.
எண்ட்ரி கேட்
பிக்பாஸ் வீட்டின் எண்ட்ரி கேட் இரண்டு கண்ணாடிகளுடன் சிம்பிளான டிசைன் உடன் வடிவமைக்கப்பட்டு உள்ளது. அதைச் சுற்றி செடிகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது.