நடிகை பவானி ரெட்டி, விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'ரெட்டைவால் குருவி', சீரியல் மூலம் மிகவும் பிரபலமானவர். தெலுங்கு சீரியல் நடிகையான இவர் தொடர்ந்து தமிழில் பல சீரியல்கள் நடித்து வருவதால் இவருக்கு தனி ரசிகர் கூட்டமே உள்ளது.
நடிகர் பிரஜன் நடித்து வந்த, 'சின்னதம்பி' சீரியலில் கதாநாயகியாக நந்தினி என்ற ரோலில் நடித்தார். இந்த சீரியல் இவருக்கு மற்றும் இன்றி, பிரஜினுக்கும் மிகப்பெரிய பிரேக் கொடுத்துள்ளது.
நடிகர் பிரஜன் நடித்து வந்த, 'சின்னதம்பி' சீரியலில் கதாநாயகியாக நந்தினி என்ற ரோலில் நடித்தார். இந்த சீரியல் இவருக்கு மற்றும் இன்றி, பிரஜினுக்கும் மிகப்பெரிய பிரேக் கொடுத்துள்ளது.
இவர், கடந்த 2017 ஆம் ஆண்டு, தன்னுடன் நடித்த பிரதீப் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் இருவருக்கும் சிறு சிறு பிரச்சனைகள் எழ கணவர் பிரதீப், திருமணம் ஆன எட்டு மாதத்திலேயே, தற்கொலை செய்துக்கொண்டு இறந்தார். கணவர் இறந்த சோகத்தில் இருந்து மீள, மீண்டும் பவானி ரெட்டி நடிப்பில் கவனம் செலுத்த துவங்கினார்.
இதை தொடர்ந்து இவர் பெற்றோரின் வற்புறுத்தலுக்கு இணங்க இரண்டாம் திருமணத்திற்கு ஒப்புக்கொண்டார். ஆனந்த் என்பவரை பெற்றோர் சம்மதத்துடன், மிகவும் எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டார் பவானி ரெட்டி.
திருமணத்திற்கு பின், பிரபல தொலைக்காட்சியில் முக்கிய ரோலில் நடித்து வந்த 'ராசாத்தி' என்கிற சீரியலில் இருந்தும் விலகினார்.
தன்னுடைய இரண்டாவது கணவருடன், வாழ்ந்து வந்த இவர் நேற்று தன்னை பற்றி போட்டியாளர்கள் மத்தியில் கூறும் போது, பெற்றோரின் ஆசைக்காக அவர்கள் பார்த்து வைத்த மாப்பிள்ளையை திருமணம் செய்து கொண்டேன். ஆனால் அதுவும் இல்லாமல் போய் விட்டது என அழுதபடி தெரிவித்தார்.
வாழ்க்கையில் நான் தனியாகத்தான் இருக்க வேண்டும் என எழுதி இருக்கிறது போல, என்று கூறிய பின்னர்... இந்த மன உளைச்சலில் இருந்து எப்படி வெளியே வருவது என யோசித்து கொண்டிருந்த போது தான் விஜய் டிவியில் இருந்து பிக்பாஸ் அழைப்பு வந்தது. நானும் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்ததாக கூறியுள்ளார்.