Published : Jun 13, 2025, 07:18 AM ISTUpdated : Jun 13, 2025, 07:21 AM IST
பிக் பாஸ் சீசன் 8 போட்டியாளரான அன்ஷிதா சொந்தமாக வீடு கட்டி கிரஹபிரவேசம் செய்துள்ளார். அந்தப் புகைப்படங்களை அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கேரளாவை பூர்வீகமாகக் கொண்டவர் அன்ஷிதா அக்பர்ஷா. மலையாள சீரியல்களில் நடித்து வந்த இவர், தமிழில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘செல்லம்மா’ சீரியலில் நடித்ததன் மூலமாக தமிழ் திரை ரசிகர்களுக்கு அறிமுகமானார். இந்த சீரியலுக்குப் பின்னர் இவருக்கு ‘குக்கு வித் கோமாளி’ சீசன் 5 நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன் பின்னர் இவர் விஜய் டிவியின் பிரபல ரியாலிட்டி ஷோவானா ‘பிக் பாஸ்’ சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கெடுத்தார்.
27
பிக் பாஸில் பங்கேற்கும் வாய்ப்பு
பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் 84 நாட்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்தார். இவருக்கு ஒரு நாளைக்கு ரூ.25 ஆயிரம் சம்பளம் வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது. இதன் மூலம் இவர் சுமார் ரூ.21 லட்சம் சம்பளம் பெற்றதாக கூறப்பட்டது. இவருடைய மலையாளம் கலந்த தமிழ் பேச்சு பல ரசிகர்களை கவர்ந்தது. மேலும் பிக் பாஸ் வீட்டிற்குள் இவருக்கு சக போட்டியாளரான விஷாலுடன் காதல் ஏற்பட்டதாக கூறப்பட்டது. அது அப்போது பல விமர்சனங்களை கிளப்பியது.
37
அன்ஷிதா - அர்னவ் காதல் சர்ச்சை
‘பிக் பாஸ்’ வருவதற்கு முன்பு ‘செல்லம்மா’ சீரியலின் ஹீரோவான அர்னவ் உடன் அன்ஷிதாவிற்கு காதல் இருந்ததாக கூறப்பட்டது. அர்னவ் தனது மனைவி திவ்யாவைப் பிரிவதற்கு அன்ஷிதா தான் காரணம் என பலரும் அவரை விமர்சித்து வந்தனர். ஆனால் தனக்கும் அர்னவ்-திவ்யா பிரிவுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என அன்ஷிதா கூறியிருந்தார். இந்த நிலையில் அர்னவுடன் பிக் பாஸில் அன்ஷிதா கலந்து கொண்டது பெரும் சர்ச்சையை கிளப்பியிருந்தது.
பிக் பாஸில் இருந்து அர்னவ் வெளியேறிய பின்னர் அந்த நிகழ்ச்சியின் மற்றொரு போட்டியாளராக கலந்து கொண்ட வி.ஜே விஷால் மீது அன்ஷிதாவிற்கு காதல் ஏற்பட்டதாக கூறப்பட்டது. பிக் பாஸ் வீட்டில் விஷாலின் காதில் அன்ஷிதா ஐ லவ் யூ கூறியதாக சமூக வலைதளங்களில் வீடியோக்கள் வைரலானது. ஆனால் இந்த தகவலை அன்ஷிதா மறுத்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு அன்ஷிதா ‘ஜோடி ஆர் யூ ரெடி’ போன்ற நடன நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார்.
57
சொந்த வீடு வாங்கிய அன்ஷிதா
இந்த நிலையில் அன்ஷிதா தனது நீண்ட நாள் கனவான சொந்த வீட்டை வாங்கி இருக்கிறார். இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உணர்வு பூர்வமான பதிவை பகிர்ந்துள்ளார், அந்த பதிவில், புதிய தொடக்கங்கள். எனது கனவு இல்லம். என்னுடைய கனவு நிஜமாக மாறி உள்ளது. இது வெறும் வீடு அல்ல. கடவுளின் பரிசு. கடினமான காலத்தில் என்னுடன் நின்ற உங்களின் அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி.
67
சமூக வலைத்தளத்தில் உருக்கமான பதிவு
எனக்கே என் மேல் சந்தேகம் வந்தபோது என்னை நம்பி நான் மலர்வதற்காக நீங்கள் உதவினீர்கள். எனக்கு கடினமான நாட்களை கொடுத்தவர்களுக்கும் நன்றி. ஏனென்றால் நீங்கள் என்னை வலிமையான, அசைக்க முடியாதவராக மாற்றி உள்ளீர்கள். நன்றியுணர்வு நிறைந்த இதயத்துடனும், புதிய அத்தியாயத்திற்கு தயாராக இருக்கும் இந்த ஆன்மாவுடனும் என் சிறிய சொர்க்கத்தில் ஒரு புதிய தொடக்கத்தை தொடங்குகிறேன் என பதிவிட்டுள்ளார்.
77
அன்ஷிதாவை வாழ்த்தும் ரசிகர்கள்
மண் பானையில் பால் காய்ச்சி சொந்த வீட்டிற்குள் குடி புகுந்த புகைப்படங்களை அன்ஷிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அந்த புகைப்படங்களுக்கு கீழே அவரது நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.