பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதும் மகளை சந்தித்த ராபர்ட் மாஸ்டர்! வைரலாகும் புகைப்படம்..!

Published : Dec 09, 2022, 03:57 PM IST

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து, கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியே சென்ற ராபர்ட் மாஸ்டர் 'ஐ லவ் மை டாட்டர்' என போஸ்ட் செய்துள்ள புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.  

PREV
16
பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதும் மகளை சந்தித்த ராபர்ட் மாஸ்டர்! வைரலாகும் புகைப்படம்..!

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி 60 நாட்களை எட்டியுள்ள நிலையில், மிகவும் பரபரப்பான விவாதங்கள் மற்றும் சண்டைகளுக்கு நடுவே ஒளிபரப்பாகி வருகிறது.

26

இந்த நிகழ்ச்சியில் இருந்து இதுவரை ஜிபி முத்து, சாந்தி, செரினா, அசல் கோளாறு, மகேஸ்வரி, நிவாஸினி, குயின்சி, ராபர்ட் மாஸ்டர், ஆகியோர்  வெளியேறியுள்ள நிலையில் இந்த வாரம்... இரண்டு பேர் எலிமினேஷன் ஆக உள்ளதை கமல் ஹாசன் கடந்த வாரமே உறுதி செய்தார். 

எளிமையாக நடந்த நடிகை ஹரி பிரியா - வசிஷ்டா சிம்ஹாவுக்கு நடந்த நிச்சயதார்த்தம்! வைரலாகும் வீடியோ..!
 

36

எனவே பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற உள்ள அந்த இரண்டு போட்டியாளர்கள் யார்.. யாராக இருக்கும்  என ரசிகர்கள் யுகங்களின் அடிப்படையில் கூறி வருகிறார்கள். அந்த வகையில் இந்த வாரம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் குறைவான ஓட்டுகளுடன் ராம் மற்றும் ஆயிஷா ஆகியோர் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
 

46

இந்நிலையில் சமீபத்தில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ராபர்ட் மாஸ்டர் ஐ லவ் மை டாட்டர் என குறிப்பிட்ட குவின்சியுடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட, அது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

பிரபல நடிகருடன் அர்ஜுன் பட ஹீரோயின் ஹரி பிரியாவிற்கு நடந்த நிச்சயதார்த்தம்! வெளியான புகைப்படங்கள்!

56

ஏற்கனவே குவின்ஸி பிக்பாஸ் வீட்டை விட்டு சென்றதும், ராபர்ட் மாஸ்டரை தான் சந்திப்பேன் என கூறியிருந்த நிலையில்... இவர்களுடைய இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. தன்னுடைய சொந்த மகளை ராபர்ட் மாஸ்டர் பார்க்கவில்லை என்றாலும், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தனக்கு ஒரு மகள் கிடைத்ததை தெரிவிக்கும் விதமாக இந்த புகைப்படத்தை மிகவும் மகிழ்ச்சியுடன் வெளியிட்டுள்ளார்.
 

66

இருப்பினும் அவருடைய ரசிகர்கள், எப்போது உங்களுடைய சொந்த மகளை பார்க்கப் போகிறீர்கள் என கேள்வி எழுப்பி வருகின்றனர். விரைவில் தன்னுடைய சொந்த மகளையும் ராபர்ட் மாஸ்டர் பார்ப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

குழந்தை பெற்ற பிறகும் குறையாத அழகு! மஞ்சள் நிற பட்டாம்பூச்சியாய் ரசிகர்கள் மனதை சிறகடிக்க செய்த சினேகா!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories