பெற்றோருக்காக ரக்ஷிதா எடுத்த முடிவு..! மனதார பாராட்டும் ரசிகர்கள்..!

First Published | Oct 20, 2022, 10:58 PM IST

சின்னத்திரை நடிகை ரக்ஷிதா மஹாலக்ஷ்மி, தற்போது பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த முக்கிய போட்டியாளர்களின் ஒருவராக மாறியுள்ளார். அவரது பேச்சு ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ளது.
 

பிக்பாஸ் வீட்டில் சக போட்டியாளர்களிடம் பேசிய ரக்ஷிதா,  “பெற்றோர்கள் அனைவரும் தாங்கள் சேர்த்து வைத்த அனைத்தையும் தங்கள் குழந்தைகளுக்கு கொடுத்து விடுகிறார்கள். பின் பிள்ளைகள் வளர்ந்து திருமணம் முடிந்த பிறகு, தங்களுக்கு ஏதாவது தேவை என்றால் கூட பிள்ளைகளிடம் கேட்கலாமா வேண்டாமா என யோசித்து கடைசியில் வேண்டாம் என விட்டுவிடுகிறார்கள். 
 

பிள்ளைகளுக்கோ சில கட்டுப்பாடுகளால் பெற்றோர்களுக்கு எதுவும் கொடுக்க முடியாத சூழல் ஏற்படலாம். இது இருவருக்குமே சங்கடத்தை ஏற்படுத்தும். இதனால் நான் என் பெற்றோர்களிடம் நீங்கள் சேர்க்கும் காசு உங்களுடையது. நான் மோசமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டால் கூட என்னை நானே பார்த்துகொள்வேன். நீங்கள் உங்கள் பணத்தை எனக்காக செலவு செய்யக்கூடாது என கூறிவிட்டேன்” என கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்: புது காரை காட்ட வந்த நடிகர்..! இன்ப அதிர்ச்சி கொடுத்த விஷால்.. என்ன செய்தார் தெரியுமா?
 

Tap to resize

பெற்றோரை சார்ந்து இருக்காமல், பெற்றோருக்கு சிரமம் கொடுக்காமல் நாமே அனைத்தையும் பார்த்துக்கொள்வதுதான் அவர்களுக்கும் வாழ்வின் மீதான சுமையை குறைக்கும் என்ற ரச்சிதாவின் பேச்சு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
 

ரக்ஷிதா, பல சீரியல்களில் நடித்திருந்தாலும், இவரது சின்னத்திரை பயணத்தில்... மிகவும் முக்கியமானது என்றால் அது, 'சரவணன் மீனாட்சி' சீரியல் தான். இந்த சீரியலில் இவர் கட்டி வரும், புடவையின் அழகை ரசிக்கவே தனி ரசிகர்கள் கூட்டம் இருந்தது. 

மேலும் செய்திகள்: பட்டு புடவை அழகில்... மந்திர புன்னகையால் ரசிகர்களை மயக்கும் வாணி போஜன்! லேட்டஸ்ட் போட்டோஸ்!
 

இந்த சீரியலுக்கு பின்னர்,  இயக்குனர் ராதா மோகன் இயக்கிய 'உப்பு கருவாடு' போன்ற படங்களில் கூட இவருக்கு நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தது. ஆனால் தொடர்த்து இவருக்கு சினிமா வாய்ப்புகள் கிடைக்காததால், மீண்டும் சின்னத்திரைக்கு திரும்பியுள்ளார். கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்று வாழ்ந்து வரும் ரக்ஷிதா, பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் மீண்டும் பட வாய்ப்புகளை எட்டி பிடிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Latest Videos

click me!