விஷாலின் ரசிகரும் மற்றும் புதுமுக நடிகருமான சோமு அவர்கள் ஒரு புதிய கார் ஒன்றை வாங்கி இருக்கிறார். புது காரை வாங்கிய சோமு இதை எப்படியாவது விஷால் அண்ணாவிடம் கொடுத்து ஆசி பெற வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளார். தனது ஆசையை விஷால் அவர்களின் மேனேஜர் ஆன ஹரிகிருஷ்ணன் அவர்களிடம் தெரிவித்தார்.
விஷால் சோமுவின் ஆசைக்கு ஏற்ப அந்த காரின் சாவியை வாங்கி காரினுள் அமர்ந்து காரை ஸ்டார்ட் செய்து சற்று ஓட்டியும் பார்த்தார். காரை ஓட்டி பார்த்தது மட்டும் இல்லாமல் வெளியே இறங்கி வந்து சோமுவுக்கு ஆல் த பெஸ்ட் என்று கூறிவிட்டு தனது ஜாகுவார் காரில் ஏறி பறந்து சென்றாராம்.
விஷால் தான் ரசிக்கும் ஒரு ஹீரோவை தான் அண்ணனாக நினைக்கும் ஒரு கதாநாயகனை வெறும் பார்த்துவிட்டு புதிய காரை காண்பித்துவிட்டு செல்லலாம் என்று வந்த சோமுவுக்கு இது மிகப்பெரிய இன்ப அதிர்ச்சியாக இருந்துள்ளது. இதுபோன்று தன்னைத் தேடி வந்த ரசிகனை மதிக்க தெரிந்த ஹீரோக்கள் மிகவும் குறைவு அந்த விதத்தில் விஷால் வேற லெவல் என புகழ்ந்து வருகிறார்கள்.
மேலும் செய்திகள்: விபத்தில் சிக்கிய நடிகை பூஜை ஹெக்டே..! கட்டுடன் வெளியிட்ட அதிர்ச்சி புகைப்படம்..!