டாடா படத்தை வருகிற ஜனவரி 26-ந் தேதி குடியரசு தினத்தன்று ரிலீஸ் செய்ய திட்டமிட்ட படக்குழு அதுகுறித்த அறிவிப்பையும் கடந்த மாதம் வெளியிட்டு இருந்தது. இந்நிலையில், தற்போது அப்படத்தின் ரிலீஸ் தேதியை திடீரென மாற்றி உள்ளது படக்குழு. வருகிற பிப்ரவரி 10-ந் தேதி டாடா படம் ரிலீஸ் செய்யப்படும் என தற்போது அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.