கடந்த 2010 ஆம் ஆண்டு, மலையாள திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான, அனிகா சுரேந்திரன்... பின்னர் அடுத்தடுத்து பல படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.
பின்னர் தமிழில் நானும் ரௌடி தான், மித்ரன், விஸ்வாசம், போன்ற படங்களில் நடித்தார். திரைப்படங்கள் மட்டும் இன்றி, குறும்படங்கள், வெப் சீரிஸ் போன்றவற்றிலும் நடித்து மிகவும் பிரபலமானவர். குறிப்பாக கெளதம் மேனன் இயக்கத்தில் வெளியான குயின் வெப் சீரிஸில் ஜெயலலிதாவின் சிறிய வயது கதாபாத்திரத்தில்அம்முவாக ஜொலித்தார்.
எப்படியும் தெலுங்கில் இவர் நடித்துள்ள திரைப்படம் வெளியான பின்னர்... முழு நேர நாயகியாக இவர் மாறலாம் என இப்போதே ரசிகர்கள் கூறிவருகிறார்கள்.
நீல நிற மேக்சி உடையில்... குட்டி நாயனாகவே மாறி அழகு பொங்கும் தேவதையாக மிளிரும் கியூட் புகைப்படங்கள் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.