முதல் படமே எடுக்கல, அதற்குள் 2-வது படத்துக்கு பூஜையா? கிரவுடு ஃபண்டிங் பணம் என்னாச்சு? கோபி, சுதாகர் விளக்கம்

First Published Jan 23, 2023, 2:32 PM IST

கிரவுடு ஃபண்டிங் மூலம் வசூலித்து முதல் படமே எடுக்கப்படாத நிலையில், தங்களது 2-வது படத்திற்கு பூஜை போட்டுள்ளதாக கோபி - சுதாகர் அறிவித்து உள்ளனர். 

யூடியூப் மூலம் பிரபலமானவர்கள் கோபி - சுதாகர். பரிதாபங்கள் எனும் யூடியூப் சேனலை நடத்தி வரும் இவர்கள் அதில் பல்வேறு ஸ்பூஃப் வீடியோக்களை பதிவிட்டதன் மூலம் மக்கள் மத்தியில் பேமஸ் ஆகினர். இதன்காரணமாக இவர்களுக்கு யூடியூப்பில் 40 லட்சத்துக்கும் அதிகமான பாலோவர்கள் இருக்கிறார். இன்ஸ்டாகிராமிலும் திரும்பிய பக்கமெல்லாம் இவர்களுடைய ரீல்ஸ் தான் உலா வருகின்றன.

சமீபத்தில் கூட வடக்கன் ரயில் பாவங்கள் என வட இந்தியர்கள் இரயிலில் செய்யும் சேட்டைகளை தத்ரூபமாக செய்து காட்டி வீடியோவாக வெளியிட்டு இருந்தனர். அந்த வீடியோ மிகப்பெரிய அளவில் வைரல் ஆனது. 

இவ்வாறு தொடர்ந்து யூடியூப்பில் வீடியோ வெளியிட்டு அதன்மூலம் சம்பாதித்து வரும் இவர்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் படம் எடுக்க உள்ளதாக அறிவித்தனர்.

இதற்காக கிரவுடு ஃபண்டிங் மூலம் தங்களுடைய பாலோவர்களிடம் பணம் வசூலித்தனர். இதன் மூலம் கோடிக்கணக்கில் நிதியும் திரட்டப்பட்டது. அந்த பணத்தை வைத்து “ஹே மணி கம் டுடே, கோ டுமாரோ” என்கிற படத்தை எடுக்க உள்ளதாகவும் அறிவித்தனர். ஆனால் அந்த சமயத்தில் கொரோனா ஊரடங்கு போடப்பட்டதால் அந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கப்படவில்லை.

இதையும் படியுங்கள்... கே.எல்.ராகுலின் மனைவியாகும் அதியா ஷெட்டி யார்? பாலிவுட் நடிகருக்கும் அவருக்கும் என்ன தொடர்பு?

இதையடுத்து இரண்டு ஆண்டுகள் ஆகியும் அந்த படம் என்ன ஆனது என்பதை பற்றி எந்தவித அப்டேட்டும் கொடுக்காமல் இருந்து வந்த இவர்கள், அப்படத்தின் பணிகளை விரைவில் தொடங்குவோம் என கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவித்திருந்தனர். ஆனால் தற்போது தங்களது இரண்டாவது படம் குறித்த அறிவிப்பை இருவரும் வெளியிட்டுள்ளனர்.

பெயரிடப்படாத அப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கி உள்ளது. அப்படத்தை புதுமுக இயக்குனர் விஷ்ணு விஜயன் இயக்க உள்ளதாகவும், விக்னேஷ் என்பவர் அப்படத்தை தயாரிக்க உள்ளதாகவும் அறிவித்து பூஜையின் போது எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு உள்ளனர். இதைப்பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் முதல் படமான “ஹே மணி கம் டுடே, கோ டுமாரோ” என்னாச்சு என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அந்த படம் எடுப்பதற்காக கிரவுடு ஃபண்டிங் மூலம் வசூலித்த பணத்தை என்ன செய்தீர்கள் என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வந்தனர். இந்த சர்ச்சைகளுக்கு விளக்கம் கொடுக்கும் விதமாக இப்படத்தின் பூஜையின் போது அவர்கள் பேசுகையில், முதல் படம் பட்ஜெட் அதிகமானதால் அதனை கிடப்பில் போட்டுவிட்டு, எங்களை நம்பி பணம் கொடுத்தவர்களுக்காகத் தான் இந்த இரண்டாவது படத்தை ஆரம்பித்துள்ளதாக கோபியும், சுதாகரும் விளக்கம் அளித்துள்ளனர். 

இதையும் படியுங்கள்...  யார் இந்த அசீம்?... ரெட் கார்டு வாங்கியவர் பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆனது எப்படி? - அவர் கடந்து வந்த பாதை

click me!