ஜல்லிக்கட்டு போராட்டத்தின், மூலம் அறியப்பட்ட ஜூலி... இதையே ஒரு அடையாமளாக வைத்து கொண்டு, நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனின் போட்டியாளர்களில் ஒருவராக உள்ளே சென்றார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் உள்ளே சென்ற போது, இவருக்கு மக்கள் பலர்... வாழ்த்து கூறி உள்ளே அனுப்பினர். பிக்பாஸ் வீட்டில் இவர் நடந்து கொண்ட விதம், பல விஷயங்களில் அப்பட்டமாக பொய் சொல்லி சிக்கியது, இவரது முகத்திரையை கிழித்தது. இதனால் பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளாகி வெளியேறினார். வெளியே வந்ததும், சினிமாவில் நடிக்க மாட்டேன்... தெய்வமாக நினைக்கும் நர்ஸ் தொழிலை தான் செய்வேன் என கலர் கலராக ரீல் விட்ட ஜூலி. தற்போது நர்ஸ் என்கிற அடையாளத்தை ஓரம் கட்டி வைத்து விட்டு, திரையுலகில் கவனம் செலுத்தி வருகிறார்.
மேலும் செய்திகள்: கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகளோடு... தன்னுடைய 4 மாத மகனின் புகைப்படத்தை பகிர்ந்த காஜல் அகர்வால்.!
ஆனால் என்ன நேரமோ... இவர் நாயகியாக நடித்த ஒரு படம் கூட இன்னும் வெளியாகவில்லை. குணச்சித்திர வேடத்தில் நடித்த படங்கள் மட்டுமே வெளியானது. மேலும் தற்போது மாடலிங் துறையிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
ஜூலியை தன்னை காதலித்து கொண்டே... இன்னொருவருடன் பழகியது தான் பிரச்சனைக்கு காரணம் என்றும், அவர் கொடுத்த பொருட்களை திரும்பி ஒப்படைப்பதாக அந்த நபர் கூறியதை தொடர்ந்து, பொய் புகார் கூறிய ஜூலியை போலீசார் கண்டித்து அனுப்பியதாகவும் செய்திகள் வெளியானது.
தற்போது மீண்டும் தன்னுடைய அன்றாட பணிகளில் கவனம் செலுத்தி வரும் ஜூலி, அவ்வப்போது நைட் பார்ட்டியில் கலந்து கொள்வது, மற்றும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், பிக்பாஸ் பாலாவுடன் இவர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் நெருக்கமாக எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
கலிடாஸ் வென்ச்சர்ஸ் மற்றும் ஐகே கிரியேஷன்ஸ் ஏற்பாடு செய்யப்பட்ட சிவகாமி எஸ்டேட் மற்றும் ராயல் கிரவுன் ரிசார்ட் வழங்கும் மாநில அளவிலான வாலி பால் போட்டி நடந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் தான் ஜூலி, பாலா, மற்றும் இன்னும் சில பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். அப்போது ஜூலி பாலாவுடன் நட்பு ரீதியாக எடுத்துக்கொண்ட நெருக்கமான புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.