சந்தோஷ் நாராயணன் உடன் சண்டையா..! இணைந்து பணியாற்றாதது ஏன்? - முதன்முறையாக மவுனம் கலைத்த பா.இரஞ்சித்

Published : Aug 20, 2022, 03:29 PM IST

Pa Ranjith : பா.இரஞ்சித்துக்கும் சந்தோஷ் நாராயணனுக்கும் இடையே சண்டை ஏற்பட்டதால் அவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றவில்லை என்று கூறப்பட்ட நிலையில் அதுகுறித்து அவரே விளக்கம் அளித்துள்ளார்.

PREV
15
சந்தோஷ் நாராயணன் உடன் சண்டையா..! இணைந்து பணியாற்றாதது ஏன்? - முதன்முறையாக மவுனம் கலைத்த பா.இரஞ்சித்

பா.இரஞ்சித் இயக்கத்தில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியான படம் அட்டக்கத்தி. இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் சந்தோஷ் நாராயணன். இப்படத்தில் இடம்பெற்ற ஆடி போனா ஆவணி என்கிற கானா பாடல் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றன. இதனால் பா.இரஞ்சித் - சந்தோஷ் நாராயணன் கூட்டணி அடுத்தடுத்த படங்களில் இணைந்து பணியாற்றியது.

25

குறிப்பாக பா.இரஞ்சித் இயக்கத்தில் இதுவரை வெளியான அட்டக்கத்தி, மெட்ராஸ், காலா, கபாலி, சார்பட்டா பரம்பரை என அனைத்து படங்களுக்கும் இசையமைத்தது சந்தோஷ் நாராயணன் தான். தமிழ் திரையுலகில் சுமார் 10 ஆண்டுகளாக இணைந்து பணியாற்றி வந்த இந்த கூட்டணி, கடந்த ஆண்டு பிரிந்தது.

35

பா.இரஞ்சித் இயக்கத்தில் தற்போது உருவாகி இருக்கும் நட்சத்திரம் நகர்கிறது படத்திற்கு சந்தோஷ் நாராயணனுக்கு பதில் தென்மாவை இசையமைத்து வைத்துள்ளார். இதேபோல் அவர் அடுத்ததாக இயக்க உள்ள சியான் விக்ரமின் படத்துக்கும் ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார். இவ்வாறு அடுத்தடுத்த படங்களில் சந்தோஷ் நாராயணனை பா.இரஞ்சித் புறக்கணித்ததற்கு என்ஜாய் எஞ்சாமி பாடல் சர்ச்சை தான் காரணம் என கூறப்பட்டு வந்தது.

இதையும் படியுங்கள்... இதென்னப்பா புது டிரெண்டா இருக்கு... தன்னைத் தானே திருமணம் செய்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த பிரபல நடிகை

45

அப்பாடலில் பாடிய தெருக்குரல் அறிவை புறக்கணித்துவிட்டு தனது மகளை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் முன்னிலைப்படுத்தியதாக சர்ச்சை எழுந்தது. இதனால் பா.இரஞ்சித்துக்கும் சந்தோஷ் நாராயணனுக்கும் இடையே சண்டை ஏற்பட்டதாகவும், அதனால் அவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றவில்லை என்றும் கூறப்பட்டது.

55

இந்நிலையில் அதுகுறித்து இயக்குனர் பா.இரஞ்சித் விளக்கம் அளித்துள்ளார். இதுவரை நாங்கள் 5 படங்களில் சேர்ந்து பணியாற்றி இருக்கிறோம். வேறு இசையமைப்பாளருடன் பணியாற்றினால் வித்தியாசமாக இருக்கும் என கருதினேன். இதனால் இனி நாங்கள் சேர்ந்து பணியாற்றவே மாட்டோம் என அர்த்தமில்லை. எங்களுக்கு எந்தவித சண்டையும் இல்லை. நான் அழைத்தால் நிச்சயம் சந்தோஷ் நாராயணன் என்னுடன் பணியாற்றுவார் என நம்புவதாக பா.இரஞ்சித் கூறி உள்ளார்.

இதையும் படியுங்கள்... சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்ட விஜய் தேவரகொண்டா! லைகர் படத்துக்கு கிளம்பிய திடீர் எதிர்ப்பு- ஏன் தெரியுமா

Read more Photos on
click me!

Recommended Stories