பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 5 சீசனை விட, இந்த முறை மிகவும் வித்தியாசமாக உள்ளது. குறிப்பாக வந்த முதல் நாளே டாஸ்க் வைத்து நான்கு பேரை வீட்டிற்கு வெளியே அனுப்பினார் பிக்பாஸ். அவர்கள் நான்கு பேரும் இந்த முறை நேரடியாக நாமினேஷன் லிஸ்டில் இடம்பிடிக்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்த முறை 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளதால், அடுத்தவாரம் துவங்கும் நாமினேஷனில் பலரின் பெயர் இடம்பெறும் என தெரிகிறது .
எனவே இந்த வாரம் எலிமினேஷன் இல்ல விட்டாலும், அடுத்த வாரம் எலிமினேஷனில் தனலட்சுமி சிக்கினால்... இவரை தான் முதலில் வீட்டை விட்டு வெளியே அனுப்புவோம் என கூறி வருகின்றனர் ஜி.பி.முத்து ஆதரவாளர்கள்.
மேலும் பிக்பாஸ் வீட்டில், மகேஸ்வரியிடம் சாப்பாட்டுக்காக பிரச்சனை செய்து சிக்கிய தனலட்சுமி தற்போது ஜிபி முத்து விஷயத்திலும் சிக்கி உள்ளார். கடந்த சீசனில் கூட போட்டியாளர்கள் கணித்தது போலவே ஒவ்வொரு பிரபலங்கள் வெளியான நிலையில், இந்த முறையும் அப்படியே நடக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.