பிரபல ஒளிப்பதிவாளர் மது அம்பாட்டிடம் மலையாளம், தமிழ் படங்களில் பணியாற்றிய நாகேந்திரன் என்பவர் முதல்முறையாக இயக்கும் படம் மிளிர்.
இப்படத்தின் நாயகனாக இந்தோனேசியாவை சேர்ந்த தமிழர் சரண் விசாகன் அறிமுகமாகிறார். வில்லனாக இயக்குனரும் நடிகருமான ஏ.வெங்கடேஷ் நடிக்கிறார்.
இதனை தொடர்ந்து அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. சமீபத்தில் இயக்குனர் பா.ரஞ்சித் வெளியிட்ட இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைத்தளங்களில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது ஷூட்டிங் ஸ்பாட் போட்டோஸ் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் மிளிர் படத்தின் மோஷன் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டு உள்ளது. இந்த மோஷன் போஸ்டரை மலையாள இயக்குனர்கள் ஜோஜூ மற்றும் பிரஜேஷ் சென் ஆகியோர் வெளியிட்டனர். இந்த மோஷன் போஸ்டர் வெளியாகி சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.