குழந்தை நட்சத்திரமாக விஜய் டிவி சீரியலான 7 சி சீரியலில் அறிமுகமானவர் கேப்ரியல்லா. இதை தொடர்ந்து ஸ்ருதிஹாசனுக்கு தங்கையாக 3, ராதிகாவுக்கு மகளாக சென்னையில் ஒருநாள், சமுத்திரக்கனி நடித்த அப்பா ஆகிய படங்களில் நடித்திருந்தார்.
கடைசி வரை நின்று விளையாடிய கேப்ரியல்லா... ஒரு கட்டத்தில் பிக்பாஸ் கொடுத்த 5 லட்ச ரூபாயை எடுத்து கொண்டு பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். பின்னர் திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும் சீரியலில் ஹீரோயினாக நாட்டிற்கும் வாய்ப்பு கிடைத்தது.
இருவரும் ஒன்றாக இணைந்து பிக்பாஸ் ஜோடி நிகழ்ச்சியிலும் நடனம் ஆடினர். மேலும் அவ்வப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், டான்ஸ் ஆடி அதன் வீடியோவையும் வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளனர்.