பிரபல நடிகையும், பிக்பாஸ் பிரபலமுமான சனம் ஷெட்டி அச்சு அசல் குந்தவையாகவே மாறி வெளியிட்டுள்ள போட்டோ ஷூட் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பார்க்கப்பட்டு, லைக்குகளை குவித்து வருகிறது.
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியான திரைப்படம் 'பொன்னியின் செல்வன்'. இந்த திரைப்படம் வெளியாகி 5 நாட்கள் ஆகும் நிலையில், நாளுக்கு நாள் வசூல் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
26
இந்த திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் ஒரு புறம் கிடைத்து வந்தாலும், இந்த படத்தில் நடித்துள்ள த்ரிஷா மற்றும் ஐஸ்வர்யா ராய்யின் தோற்றம் ரசிகர்களை அதிக அளவிற்கு கவர்ந்துள்ளது.
நடிகைகள், மாடல், மற்றும் சமூக வலைத்தளத்தில் பிரபலமாக இருப்பவர்கள் பலர், தொடர்ந்து த்ரிஷா மற்றும் ஐஸ்வர்யா ராய்யின் கெட்டப்பில் போட்டோ ஷூட் எடுத்து வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
46
அந்தவகையில் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடிய சனம் ஷெட்டி, அச்சு அசல் குந்தவை த்ரிஷா போன்றே தோன்றி போட்டோஷூட் எடுத்து அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த புகைப்படங்களுக்கு ஏராளமான லைக்ஸ், தற்போது குவிந்து வருகிறது. மேலும் இந்த போட்டோ ஷூட் புகைப்படங்களை பார்த்து, நிஜ குந்தவையான, த்ரிஷாவே தன்னை பாராட்டியதாக கூறியுள்ளார்.
66
சனம் ஷெட்டி நடிப்பில் கடைசியாக மஹா திரைப்படம் வெளியான நிலையில், இந்த படத்தை தொடர்ந்து எதிர்வினையாற்று என்கிற படத்தில் நடித்து வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் திரையுலகில் நிலையான இடத்தை பிடித்து விடலாம் என நினைத்த சனம் ஷெட்டியின் கனவு தற்போது வரை நிறைவேறாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.