தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் திருமண புகைப்படங்கள்:
ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் பிரபல நடிகர் தனுஷும் காதல் கரம் பிடித்தவர்கள். அவர்களது திருமணம் 18 வருடங்கள் கழித்து தற்போது விவாகரத்தில் வந்து நிற்கிறது. இந்த தம்பதிக்கு லிங்கா, யாத்ரா என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். கடந்த 2004-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இந்த ஜோடி கடந்தாண்டு ஜனவரி 17 அன்று திருமண பந்தத்தை முடித்துக் கொள்வதாக ஒரே மாதிரியான பதிவை வெளியிட்டு இருந்தனர்.
25
தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் திருமண புகைப்படங்கள்:
இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் பேர் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து தனுஷ் மற்றும் ரஜினி குடும்பத்தை சார்ந்த பலரும் சமாதான பேச்சில் ஈடுபட்டுள்ளனர். அதோடு அவரது நண்பர்களும் பேசி இருந்தனர். இருந்தோம் இதுகுறித்து நல்ல முடிவை எடுக்க இந்த ஜோடி மறுத்து வந்தது. அதோடு தனுஷின் தகப்பனாரான கஸ்தூரிராஜா அது சாதாரண குடும்ப சண்டை தான் எனவும் பேட்டி அளித்திருந்தார்.
இதற்கிடையே தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவரவர் பாதையில் பிஸியாக இருந்த போதிலும் தங்களது குழந்தைகளுக்காக அவ்வப்போது ஒன்றாக சந்தித்து வந்தனர். இந்த புகைப்படங்களும் சமூக வலைதளத்தில் உலா வந்தது.
இந்நிலையில் ஐஸ்வர்யா - தனுஷ் தனது திருமண வாழ்க்கையை தொடர இருப்பதாக தகவல் ஒன்று தற்போது கசிந்துள்ளது. அந்த தகவலின் படி தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் இணைந்து வாழ வேண்டும் என ரஜினி வீட்டில் வைத்தது சமரசம் பேசப்பட்டுள்ளதாகவும், இந்த பேச்சு குறித்து தம்பதி நல்ல முடிவை எடுக்க முயன்று வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் விவாகரத்து முடிவை தற்சமயத்திற்கு இருவரும் ஒத்தி வைத்துள்ளனர்.
55
இதற்கிடையே சமீபத்தில் வெளியான தனுஷ் - செல்வராகவனின் நானே ஒருவன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. அந்த படம் குறித்த செய்தியாளர் சந்திப்பில், கஸ்தூரிராஜாவிடம் தனுசு - ஐஸ்வர்யாவின் விவாகரத்து குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு இது நமக்கு சம்பந்தம் இல்லாத கேள்வி நீங்கள் கேட்கக்கூடாது என டென்ஷனாக பதில் அளித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.