Ranjith
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி பைனலை நெருங்கி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க, கடந்த அக்டோபர் 6-ந் தேதி அலப்பறையாக ஆரம்பமான இந்நிகழ்ச்சி இன்னும் ஒரு மாதத்தில் முடிவடைய உள்ளது. இந்நிகழ்ச்சியில் தற்போது 12 போட்டியாளர்கள் மட்டுமே எஞ்சி உள்ளனர். கடந்த இரு வாரங்களாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் டபுள் எவிக்ஷன் இருந்ததால் இந்த வாரமும் அதேபோல் நடக்கும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ட்விஸ்ட் கொடுக்கும் விதமாக ஒரே ஒரு நபரை எலிமினேட் செய்துள்ளார் பிக் பாஸ்.
Bigg Boss Ranjith
கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் ஓபன் நாமினேஷன் தான் நடைபெற்றது. இதில் நாமினேஷன் ப்ரீ பாஸ் பெற்ற ஜெஃப்ரி மற்றும் கேப்டன் விஷால் தவிர அனைவரும் நாமினேட் ஆகினர். நாமினேட் ஆன 10 பேரில் முத்துக்குமரன், பவித்ரா, ஜாக்குலின், செளந்தர்யா, அருண், ராணவ் ஆகியோர் அதிகப்படியான வாக்குகள் பெற்று எவிக்ஷனில் இருந்து தப்பினர். கம்மியான வாக்குகள் வாங்கிய மஞ்சரி, ரயான் மற்றும் ரஞ்சித் ஆகியோர் தான் டேஞ்சர் ஜோனில் இருந்தனர்.
இதையும் படியுங்கள்... எதிர்பாராத போட்டியாளரை வெளியேற்றி ட்விஸ்ட் கொடுத்த பிக்பாஸ்! கண்ணீரோடு வெளியே சென்றது யார் தெரியுமா?
Ranjith Eliminated from Bigg Boss
இவர்களில் பிக் பாஸ் வீட்டில் சண்டையே போடாமல், சைலண்டாக விளையாடி வந்த ரஞ்சித் தான் குறைவான வாக்குகள் பெற்றிருந்ததால் அவரை இந்த வாரம் எலிமினேட் செய்து வீட்டுக்கு அனுப்பினார் விஜய் சேதுபதி. இந்த சீசனில் அதிக வயதுடைய போட்டியாளர் ரஞ்சித் தான். அனைவருடனும் பாசமாக இருந்த அவர் எலிமினேட் ஆனதால், அனைவரும் எமோஷனலாகி கண்ணீருடன் ரஞ்சித்தை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக ரஞ்சித் வாங்கிய சம்பள விவரம் வெளியாகி உள்ளது.
Bigg Boss Ranjith Salary
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் அதிக சம்பளம் வாங்கிய போட்டியாளர் என்றால் அது ரஞ்சித் தான். இவருக்கு ஒரு நாளைக்கு ரூ.50 ஆயிரம் சம்பளமாக வழங்கப்பட்டு வந்தது. இவர் மொத்தமாக இருந்த 77 நாட்களுக்கும் சேர்த்து மொத்தமாக 38 லட்சத்து 50 ஆயிரம் சம்பளமாக வழங்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. பிக் பாஸ் டைட்டில் ஜெயிப்பவருக்கு கூட இவ்வளவு தொகை கிடைக்காது என்பது தான் இதில் ஹைலைட்டான விஷயம். பிக் பாஸ் டைட்டில் ஜெயித்தால் 50 லட்சம் பரித்தொகை வழங்கப்படும், ஆனால் அதில் பித்தம் போக அவர்களுக்கு 30 லட்சம் தான் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... பிக் பாஸ் சீசன் 8-ல் பணக்கார போட்டியாளர் இவர்தான்; சொத்து மதிப்பு இத்தனை கோடியா?