Viduthalai 2 Box Office : வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி நடிப்பில் வெளியாகி வெற்றிநடைபோட்டு வரும் விடுதலை 2 திரைப்படத்தின் வசூல் நிலவரத்தை பார்க்கலாம்.
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி கதாநாயகனாகவும், நடிகர் சூரி கதையின் நாயகனாகவும் நடித்த படம் விடுதலை 2. இப்படத்தை வெற்றிமாறன் இயக்கி உள்ளார். விடுதலை படத்தின் முதல் பாகம் மாபெரும் வெற்றியை ருசித்த நிலையில், ஒன்றரை வருட கடின உழைப்புக்கு பின்னர் அப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து முடித்து ரிலீஸ் செய்துள்ளார் வெற்றிமாறன். விடுதலை 2 படத்திற்கு வேல் ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இளையராஜா இசையமைத்துள்ளார்.
24
Viduthalai part 2
விடுதலை முதல் பாகம் முழுக்க சூரியை மையப்படுத்தி கதையை நகர்த்தி சென்ற வெற்றிமாறன். இரண்டாம் பாகத்தில் பெருமாள் வாத்தியாராக நடித்துள்ள மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் கதாபாத்திரத்தை முன்னிலைப்படுத்தி எடுத்திருக்கிறார். இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்துள்ளார். மேலும் கென் கருணாஸும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படம் கடந்த டிசம்பர் 20ந் தேதி திரையரங்குகளில் வெளியாகி சக்கைப்போடு போட்டு வருகிறது.
விடுதலை 2 திரைப்படம் வெற்றிமாறனின் மாஸ்டர் பீஸ் படம் என்று பாராட்டுக்களும் குவிந்த வண்ணம் உள்ளன. விடுதலை 2 படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருவதைப் போல் வசூல் ரீதியாகவும் சக்கைப்போடு போட்டு வருகிறது. அதன்படி ரிலீஸ் ஆன முதல் நாளில் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.7 கோடி வசூலித்து மாஸ் காட்டிய இப்படம், இரண்டாம் நாளில் அதைவிட கூடுதலாக வசூலித்து தன் வசூல் வேட்டையை தொடர்ந்து வருகிறது.
44
viduthalai 2 beat Lal Salaam Box Office
விடுதலை 2 திரைப்படம் 2-ம் நாளில் இந்திய அளவில் ரூ.8 கோடி வரை வசூலித்து உள்ளதாம். மேலும் உலகளவில் நேற்று ஒரே நாளில் ரூ.10 கோடிக்கு மேல் இப்படம் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இதன்மூலம் 2 நாட்களில் விடுதலை 2 திரைப்படம் 20 கோடிக்கு மேல் வசூலித்து பாக்ஸ் ஆபிஸில் பட்டைய கிளப்பி வருகிறது. இதன் மூலம் ரஜினி நடிப்பில் இந்த ஆண்டு ரிலீஸ் ஆன லால் சலாம் படத்தின் லைஃப் டைம் வசூலை இரண்டே நாட்களில் முறியடித்துள்ளது விடுதலை 2. இன்றும் விடுமுறை நாள் என்பதால் விடுதலை 2 படத்தின் வசூல் வேட்டை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.