Pushpa 2 Stampade
தெலுங்கு திரையுலகம் சந்தியா தியேட்டர் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்கள் மீது அக்கறையின்றி, நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ஆதரவாக இருக்கிறது என்று தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி சாடியுள்ளார்.
Revanth Reddy
சனிக்கிழமை, இந்த விவகாரம் பற்றி கருத்து கூறியுள்ள ரேவந்த் ரெட்டி, தெலுங்கு திரையுலகம் இரக்கமில்லாமல் பாதிக்கப்பட்டவர்களின் நலனைப் புறக்கணித்துவிட்டது என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், அர்ஜுன், தியேட்டரில் இருந்தபோது, பெண்ணின் மரணம் குறித்து தெரிவிக்கப்பட்டபோதும், அதுபற்றி அவர் அக்கறை காட்டவில்லை என்றும் ரேவந்த் ரெட்டி கூறியுள்ளார்.
“தங்கள் குழந்தையின் ஆசையை நிறைவேற்றுவதற்காக இவ்வளவு தியாகம் செய்த குடும்பம் இது. அவர்கள் மீது இரக்கம் காட்டுவதற்கு அல்லது அவர்களுடன் நிற்பதற்குப் பதிலாக, திரைப்படத் துறையினர் நடிகரை ஆதிக்கின்றனர். அல்லு அர்ஜுன் சிறை சென்றதால் காலையோ கண் பார்வையையோ இழந்துவிட்டா? கிட்டி பாதிக்கப்பட்டுவிட்டதா? இதுதான் தெலுங்கு திரையுலகின் லட்சணமா?" என்று சரமாரியாக சாடியுள்ளார் முதல்வர் ரேவந்த் ரெட்டி.
நடந்துகொண்டிருக்கும் தெலுங்கானா சட்டமன்றக் கூட்டத்தொடரில் பேசிய முதல்வர் ரேவந்த் ரெட்டி அவ்வாறு குறிப்பிட்டார். டோலிவுட்டில் இருந்து அனைவரும் அர்ஜுனைப் பார்க்கச் சென்றாலும், யாரும் பாதிக்கப்பட்ட குழந்தையைப் பார்க்கவில்லை. இதுபோன்ற நடத்தை மூலம் நடிகர்கள் சமூகத்திற்கு என்ன செய்தி கொடுக்க முயல்கிறார்கள் என்று அவர் கேள்வி எழுப்பினார்.
முதல்வர் மேலும் நடிகர் அல்லு அர்ஜுனை கடுமையாக விமர்சித்தார். ஒரு மரணம் குறித்து தெரிவிக்கப்பட்ட போதிலும் அவர் கவலைப்படவில்லை என்று கூறினார். “வெளியேறும்போது, ஒருவர் மரணம் நடந்ததாகத் தெரிவிக்கப்பட்டபோதும் அவர் கூட்டத்தை நோக்கி கைஅசைத்துக்கொண்டிருந்தார். இது என்ன அசட்டுத்தனம்?” என்று முதல்வர் குறிப்பிட்டார்.