புஷ்பா 2 ஓடிடி ரைட்ஸ் இத்தனை கோடியா? இது அல்லு அர்ஜூனுக்கு கொடுக்கப்படும் சம்பளமாச்சே?

Published : Dec 21, 2024, 04:28 PM IST

Pushpa 2 OTT Rights Price and Release Date : பாக்ஸ் ஆபிஸில் சக்கைப் போடு போட்டு வரும் புஷ்பா 2 படத்தின் ஓடிடி உரி்மையை எந்த நிறுவனம் எத்தனை கோடிக்கு வாங்கியிருக்கிறது என்று பார்க்கலாம் வாங்க.

PREV
14
புஷ்பா 2 ஓடிடி ரைட்ஸ் இத்தனை கோடியா? இது அல்லு அர்ஜூனுக்கு கொடுக்கப்படும் சம்பளமாச்சே?
Pushpa 2 OTT Rights Price and Release Date

Pushpa 2 OTT Rights Price and Release Date :தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக அல்லு அர்ஜூன் உருவான புஷ்பா படத்தின் 2ஆம் பாகம் 3 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 5 ஆம் தேதி திரைக்கு வந்தது. அதிக எதிர்பார்ப்புகளுடன் உருவான புஷ்பா 2: தி ரூல் வெளியீட்டிற்கு முன்னதாகவே ரூ.1085 கோடி வரையில் வசூல் குவித்துள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என்று பான் இந்தியா படமாக உருவான புஷ்பா 2 உலகம் முழுவதும் வெளியாகி வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கிறது.

24
Pushpa 2 The Rule Box Office Collection

புஷ்பா 2 வெளியாகி 2 வாரங்களை கடந்த நிலையில் உலகம் முழுவதும் ரூ.1400 கோடிக்கும் அதிகமாக வசூல் குவித்துள்ளது. இன்னும் ஒரீரு வாரங்களில் ரூ.1500 கோடியையும் நெருங்கி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2024 ஆம் ஆண்டில் அதிக வசூல் குவித்த படங்களில் புஷ்பா 2 முதலிடம் பிடித்து சாதனையை படைத்துள்ளது. இன்னும் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.

34
Allu Arjun, Pushpa 2, OTT release date

ஓடிடி ரிலீஸ்:

படத்தில் அல்லு அர்ஜூன் மற்றும் ராஷ்மிகா மந்தனாவின் நடிப்பு பட்டைய கிளப்பியிருக்கிறது என்று சொல்லப்படுகிறது. ஏற்கனவே புஷ்பா 1 தி ரைஸ் படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்ற அல்லு அர்ஜூனுக்கு இந்தப் படமும் தேசிய விருது பெற்றுக் கொடுக்கும் என்று சினிமா விமர்சகர்கள் கூறி வருகின்றனர். அந்தளவிற்கு அல்லு அர்ஜூன் நடிப்புத் திறமையை வெளிக் காட்டியிருக்கிறார். திரையரங்குகளில் பைசா வசூல் குவித்த புஷ்பா 2 படம் ஓடிடி ரிலீஸ் குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது.

44
Pushpa 2 The Rule

அதன்படி நெட்பிளிக்ஸ் நிறுவனம் புஷ்பா 2 படத்தின் ஓடிடி உரிமையை பெற்றுள்ளது. ரூ.270 கோடி கொடுத்து புஷ்பா 2 படத்திற்கான ஓடிடி ரைட்ஸை நெட்பிளிக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. எல்லா மொழிகளிலும் புஷ்பா 2 படத்தை வெளியிட தயாராகி வருகிறது.

OTTல் எப்போது வெளியிடப்படும்?

இதுவரையில் எப்போது ஓடிடியில் வெளியிடப்படும் என்ற தகவல் வெளிவரவில்லை. படம் வெளியாகி இன்றுடன் 16 நாட்கள் கடந்த நிலையில் எப்படியும் இன்னும் ஒரு சில வாரங்கள் திரையரங்குகளில் வெற்றியை பதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எப்படியும் வரும் ஜனவரி முதல் அல்லது 2ஆவது வாரங்களில் புஷ்பா 2 ஓடிடியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
click me!

Recommended Stories