
Ramesh Khanna Sons are in Direction Filed in Cinema : சினிமாவின் மோகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒரு நிகழ்ச்சியில் கவுண்டமணி கூறியது போன்று இப்போது தமிழ் சினிமாவில் நடந்து கொண்டிருக்கிறது. சினிமா பார்ப்பவர்களை விட நடிப்பவர்கள் தான் அதிகமாகிக் கொண்டிருக்கிறார்கள். இதன் காரணமாக சிறிய பட்ஜெட் படங்களுக்கு திரையரங்குகள் கிடைப்பதில்லை. அப்படியே தியேட்டர்கள் கிடைத்தாலும் குறைவான காட்சிகளுக்கு தான் அனுமதி அளிக்கப்படுகிறது என்று கூறியிருந்தார்.
அந்த வகையில் சினிமா வாரிசாக இப்போது களத்தில் இறங்கியிருப்பது நடிகரும், இயக்குநருமான ரமேஷ் கண்ணாவின் 2 மகன்களும் தான். இருவருமே இப்போது சினிமாவில் கால் பதித்துள்ளனர். இது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். 1980ஸ் காலகட்டங்களில் பாக்யராஜ் நடித்த முந்தானை முடிச்சு படத்தில் நடித்தவர் ரமேஷ் கண்ணா.
இதே போன்று ஆண் பாவம் படத்திலும் நடித்திருக்கிறார். 90ஸ் காலகட்டங்களில் தான் இவரது கதாபாத்திரங்கள் பேசும் அளவிற்கு இருந்துள்ளது. அபிராமி படத்தில் ஆரம்பித்து கோகுலம், நான் பேச நினைப்பதெல்லாம், கேப்டன், முத்து, அவ்வை சண்முகி என்று 90ஸ் காலங்களில் தொடங்கி இப்போது வரையில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். ஒரு சில படங்களில் திரைக்கதை எழுத்தாளாராகவும் பணியாற்றியிருக்கிறார்.
சின்னத்திரையில் டாப் டக்கர் என்ற டிவி சீரியலை இயக்கியுள்ளார். மேலும், அஜித் நடிப்பில் வந்த தொடரும் என்ற படத்தையும் ரமேஷ் கண்ணா இயக்கியிருக்கிறார். காமெடி மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து இன்றும் தன்னுடைய நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி வருகிறார். கடந்த 1983 ஆம் ஆண்டு முதல் இப்போது வரைக்கும் கிட்டத்தட்ட 41 ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வருகிறார். அஜித், ரஜினிகாந்த், விஜய் என்று மாஸ் ஹீரோக்களுடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார்.
கண்ணன் மற்றும் ஜஸ்வந்த் என்று ரமேஷ் கண்ணாவிற்கு 2 மகன்கள் இருக்கிறார்கள். இதில், ஜஸ்வந்திற்கு சில வருடங்களுக்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் இப்போது அவருடைய 2 மகன்களையும் சினிமாவில் நடிக்க வைத்து வருகிறார். அதுவும் இயக்குநராக அறிமுகம் செய்து வைத்திருக்கிறார்.
இது குறித்து ரமேஷ் கண்ணா கூறியிருப்பதாவது: இருவருமே சாப்ட்வேர் இன்ஜினியர். 10 லட்சம் செலவு செய்து படிக்க வைத்தேன். படித்து முடித்ததும் அமெரிக்காவில் வேலை கிடைத்தது. ஆனால், கிடைத்த வேலையை விட்டு விட்டு இப்போது சினிமாவில் சேர்த்து விடு என்று சொல்றாங்க. இதுக்கு எல்லாவற்றிற்கும் அவங்களோட அம்மா கொடுக்கும் செல்லம் தான் காரணம். எனினும், அவர்களை நான் நடிக்க வைக்கவில்லை. இருவருமே இயக்குநராக இருக்காங்க என்று கூறியிருக்கிறார்கள்.
ஆனால், படம் இயக்குராங்களா, ஷார்ட் பிலிம்மா, வெப் ஸ்டோரியா என்பது குறித்து எந்த தகவலும் கொடுக்கவில்லை. ஆனால், ரமேஷ் கண்ணாவின் மகன் ஜஸ்வந்த் ஏற்கனவே தளபதி விஜய் நடிப்பில் வந்த சர்கார் படத்தில் ஒரு சீனில் நடித்திருக்கிறார். மகேஷ் பாபு நடித்த ஸ்பைடர் படம் முதல் இயக்குநர் ஏஆர் முருகதாஸிடம் உதவி இயகுநராக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் தான் இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வந்த சர்கார் படத்தில் தன்னுடைய உதவி இயக்குநரை ஒரு சில சீனில் நடிக்க வைத்திருக்கிறார். அப்படி தான் ஜஸ்வந்தும் சினிமாவில் நடித்திருக்கிறார். ஆனால், இப்போது அவர் இயக்குநராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.