Published : Oct 12, 2024, 02:14 PM ISTUpdated : Oct 12, 2024, 02:16 PM IST
Bigg Boss Ranjith : பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டுள்ள நடிகர் ரஞ்சித், 2 முறை திருமணமாகி விவாகரத்து பெற்றிருக்கிறார் அதைப்பற்றி பார்க்கலாம்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8-வது சீசன் கடந்த அக்டோபர் 6-ந் தேதி தொடங்கியது. இந்நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் பங்கேற்று உள்ளனர். அவர்களில் நடிகர் ரஞ்சித்தும் ஒருவர். இவர் மறுமலர்ச்சி படம் மூலம் தமிழ் திரையுலகில் வில்லனாக அறிமுகமாகி பல்வேறு ஹிட் படங்களில் ஹீரோவாகவும் நடித்திருக்கிறார். நடிகராக மட்டுமின்றி இயக்குனராகவும் தன்னுடைய திறமையை காட்டி உள்ள ரஞ்சித் பீஷ்மர், கவுண்டம்பாளையம் போன்ற படங்களை இயக்கி இருக்கிறார்.
24
Ranjith First Wife Priya Raman
இவர் தற்போது பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றுள்ள நிலையில், அவரின் இல்லற வாழ்க்கை பற்றி பார்க்கலாம். ரஞ்சித் கடந்த 1999-ம் ஆண்டு நடிகை பிரியா ராமனை திருமணம் செய்துகொண்டார். பிரியா ராமன் சூர்யவம்சம் படத்தில் நடிகர் சரத்குமாரின் முறைப்பெண்ணாக நடித்திருந்தார். இதுதவிர ஜீ தமிழில் ஒளிபரப்பான செம்பருத்தி என்கிற சீரியலில் வில்லியாக நடித்து அசத்தி இருந்தார் பிரியா ராமன். இதுதவிர ஜீன்ஸ் என்கிற நிகழ்ச்சியையும் அவர் தொகுத்து வழங்கி இருந்தார்.
சினிமா மற்றும் சின்னத்திரையில் கலக்கிய பிரியா ராமன், நடிகர் ரஞ்சித்துடம் 15 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த பின்னர் கடந்த 2014-ம் ஆண்டு அவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தார். பிரியா ராமனை விவாகரத்து செய்து பிரிந்த கையோடு நடிகை ராகசுதா என்பவரை கடந்த 2014-ம் ஆண்டு இரண்டாவது திருமணம் செய்துகொண்டார் ரஞ்சித். நடிகை ராகசுதா, நடிகை கே.ஆர்.விஜயாவின் சகோதரி கே.ஆர்.சாவித்ரியின் மகள் ஆவார்.
44
Ranjith, Priyaraman
நடிகை ராகசுதா உடனான ரஞ்சித்தின் திருமண வாழ்க்கையும் வெகு நாட்கள் நீடிக்கவில்லை. திருமணமான ஒரே ஆண்டில் இருவரும் பிரிந்துவிட்டனர். இதையடுத்து தனது முதல் மனைவி பிரியா ராமனுடனான விவாகரத்தை திரும்பப்பெற்று, அவருடன் மீண்டும் சேர்ந்து வாழ்ந்து வருகிறார் ரஞ்சித். அவரை பிக்பாஸுக்கு அனுப்பி வைத்ததே பிரியா ராமன் தானாம். தன் மனைவி மீதுள்ள பாசத்தை பிக்பாஸ் வீட்டிலேயே வெளிப்படுத்தி இருந்தார் ரஞ்சித்.