பிக் பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேமஸ் ஆன நடிகை அபிராமி வெங்கடாச்சலம் இன்ஸ்டாவில் சப்ஸ்கிரைபர்களுக்கு கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசனில் கலந்துகொண்டதன் மூலம் பிரபலமானவர் அபிராமி வெங்கடாச்சலம். இவர் தமிழில் நேர்கொண்ட பார்வை, ராக்கெட்ரி போன்ற படங்களில் நடித்திருக்கிறார். மாடலிங்கில் ஆர்வம் கொண்ட இவர் தன்னுடைய இன்ஸ்டா சப்ஸ்கிரிப்ஷன் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
210
அபிராமி வெங்கடாச்சலம் போட்டோஸ்
அதன் படி நீச்சல் உடையில் எடுத்த புகைப்படங்கள், சேலையில் கவர்ச்சியான போஸ் கொடுத்தபடி இருக்கும் புகைப்படங்கள் என ஏராளமான போட்டோக்களை பகிர்ந்த வண்ணம் உள்ளார். இதற்கு சில நெகடிவ் கமெண்ட்ஸும் வந்திருக்கின்றன. அதற்கும் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ளார்.
310
அபிராமி வெங்கடாச்சலம் இன்ஸ்டா கிளிக்ஸ்
அபிராமி தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டதாவது: “அன்பான சப்ஸ்கிரைபர்களே, என்னை அன்புடன் ஆதரித்து வரும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. நான் இதை தொடங்கியது, நான் முன்பு பகிராத அல்லது முயற்சி செய்யாத தனித்துவமான கலைநயமிக்க படங்களை பகிர்வதற்காக.
இங்கு யாராவது சப்ஸ்கிரிப்ஷன் எடுத்ததால் நான் நிர்வாணமாக நிற்பேன் என்று எதிர்பார்த்தால், தயவுசெய்து நீங்கள் எப்போது வேண்டுமானாலும் அன்-சப்ஸ்கிரைப் செய்யலாம். என்ன போஸ்ட் செய்ய வேண்டும் என்று சொல்லுவது என் நோக்கம் அல்ல.
510
அபிராமி வெங்கடாச்சலம் ஓபன் டாக்
என் படைப்பாற்றலை பகிர்வதற்காகத்தான் நான் இங்கு இருக்கிறேன். அதை அழகிய கலைநயத்துடன் பார்க்கும் அனைவரும் தங்கள் கருத்துகளை பகிரலாம். இது ஒரு ஆபாச தளம் அல்ல.” என பதிவிட்டுள்ளார்.
610
பாடி ஷேமிங் பற்றி அபிராமி சொன்னதென்ன?
பாடி ஷேமிங் பற்றி நடிகை அபிராமி ஒரு பேட்டியில் கூறியதாவது : “ஆரம்பத்தில், ஆன்லைன் ட்ரோலிங்கை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஏனெனில் நான் விதிகளை பின்பற்றி வீட்டுக்குள் இருந்தேன், Netflix பார்த்தேன், இயல்பாகவே யாரும் உடல் எடை கூடுவார்கள். ஆனால் ஒவ்வொரு முறையும் வேலை தொடர்பான அழைப்பு வந்தாலும், அவர்கள் என்னுடைய திறமையைப் பற்றி அல்லாமல் என் உடல் எடையைப் பற்றியே கேட்டார்கள்.
710
அபிராமி வெங்கடாச்சலம் போட்டோஸ்
இது நீண்ட காலமாக தொடர்ந்து நடந்தது. படிப்படியாக இது என் மனநிலையை பாதித்து, நான் மனச்சோர்வில் ஆழ்ந்துவிட்டேன். நான் ஒரு வலிமையான பெண் தான், ஆனால் இது என்னை முற்றிலும் உடைத்துவிட்டது.
810
அபிராமி ஹாட்
வெளியே செல்லவும், தொலைபேசி அழைப்புகளை எடுக்கவும், என் அறையை விட்டு வெளியே வரவும் கூட நான் தவிர்க்க ஆரம்பித்தேன். “நான் கண்ணாடி முன் நின்று அழுவேன். எனது தொழிலை மாற்ற வேண்டும் என்பதையும் கூட யோசித்தேன். ஆனால் என் அம்மாவும், சகோதரரும் என்னை மிகவும் ஆதரித்தார்கள்.
910
அபிராமி வெங்கடாச்சலம் அதிரடி
‘நீ எப்படி இருக்கிறாயோ அப்படியே அழகாக இருக்கிறாய். உனக்கு விருப்பம் இருந்தால் மட்டுமே உடல் எடையை குறை, மற்றவர்கள் சொல்வதற்காக அல்ல’ என்று அவர்கள் கூறினார்கள். அதன்பிறகு நான் மனதுக்கு வந்தபோது மட்டுமே உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்தேன்.
1010
அபிராமியின் வைரல் கிளிக்ஸ்
ட்ரோலிங்கை மனதில் வைத்துக் கொள்ளாமல் விட்டுவிட்டேன். ஏனெனில் அது என் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தைக் கெடுத்தது. அது என் நேரத்தையும் ஆற்றலையும் வீணாக்குகிறது. அதனால் அவர்கள் பேசட்டும் என்று விட்டுவிட்டேன் என தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.