வீடியோவை அனுப்பியது யார்? கன்பியூசனில் ஜனனி; மதிவதினி கொடுத்த ஹிண்ட் - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்

Published : Apr 16, 2026, 10:24 AM IST

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனிக்கு ஆதி முத்து ராவணன் அனுப்பிய வீடியோவால் அவருக்கு மிகப்பெரிய குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

PREV
15
Ethirneechal Thodargiradhu Serial Today Episode

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஈஸ்வரி தன்னுடைய மகன் தர்ஷனுக்கு மீண்டும் பார்கவியோடு திருமணம் செய்துவைக்க ஆசைப்பட்டுள்ளார். அந்த ஆசையை ஆதி குணசேகரனிடம் சொல்ல, அவரும் ஈஸ்வரியின் விருப்பப்படி வீட்டிலேயே தர்ஷன் - பார்கவிக்கு திருமணம் செய்து வைக்க ஓகே சொல்கிறார். பின்னர் இந்த விஷயம் பற்றி அனைவரிடமும் சொல்கிறார்கள். அப்போது ஜனனிக்கு வாட்ஸ் அப்பில் ஒரு வீடியோ வருகிறது. அந்த வீடியோவை ஜனனி திறந்து பார்க்கிறார். அது ஆதி குணசேகரன் ஈஸ்வரியை தாக்கிய வீடியோ. இதைப்பார்த்து ஷாக் ஆகிறார் ஜனனி. இதன் பின் இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

25
மதிவதினியை சந்திக்கும் ஜனனி

பின்னர் சக்தியை தனியாக அழைத்து சென்று அந்த வீடியோவை காட்ட முயலும்போது அது டெலிட் ஆகி இருக்கிறது. யார் அந்த வீடியோவை அனுப்பியது? எதற்காக டெலிட் செய்தார் என்பது தெரியாமல் குழம்பிப் போகும் ஜனனி, இந்த விஷயம் தொடர்பாக மதிவதினியை சந்தித்து பேச செல்கிறார். அவரிடம் வீடியோ விஷயத்தை சொல்லி ஃபீல் பண்ணுகிறார். இந்த வீடியோவை யார் அனுப்புனாங்களோ அவங்க எனக்கு உதவி பண்ணுவதற்காக அனுப்பவில்லை. அந்த வீடியோவை வைத்து ஏதோ கேம் ஆடுகிறார்கள் என நினைக்கிறேன் என ஜனனி சொல்ல, நீ சொல்றது கரெக்ட் தான் ஜனனி, உதவி செய்பவராக இருந்தால், அதை ஏன் உடனடியாக டெலிட் செய்ய வேண்டும் என கேட்கிறார் மதிவதினி.

35
மதிவதினிக்கு வந்த டவுட்

அந்த வீடியோவை உங்களுக்கு அனுப்புவதற்கு முன், உங்களை தொடர்புகொண்டு பேசிருக்கலாம், இல்லையென்றால் மெசேஜாவது அனுப்பி இருக்கலாம். யாரோ கேம் ஆடுறாங்க... ஆனா அது யாருன்னு தான் தெரியல என கூறுகிறார் மதிவதினி. இது குணசேகரனுக்கு எதிரான விஷயம், கோர்ட்ல விசாரணை வருவதற்குள் இந்த கல்யாணத்தை நடத்தி முடித்து, ஈஸ்வரி அக்காவை அவங்க பக்கம் இழுக்குற மாதிரி நிறைய விஷயங்களை அவங்க வீட்ல பண்ணுறாங்க. அதையும் மீறி ஈஸ்வரி அக்கா கோர்ட்டுக்கு வந்தாலும், அவங்க மனநிலைமை எப்படி இருக்கும்னு தெரியாது. நந்தினி அக்காவும், ரேணுகா அக்காவும் என்ன செய்யப்போறாங்கனு புரிஞ்சுக்க முடியல என சொல்கிறார் ஜனனி.

45
ஜனனியை சமாதானப்படுத்தும் மதிவதினி

இந்த வழக்கை பொறுத்தவரை, நம்மகிட்ட இருக்குற ஒரே ஒரு வலுவான ஆதாரம் இந்த வீடியோ மட்டும் தான். அதையும் இப்போ வரைக்கும் நம்மால் எடுக்க முடியலன்னு ரொம்ப டென்ஷனா இருக்கு. இது எதுனால நடக்குது, ஏன் இப்படியெல்லாம் நடக்குதுனு என்னால் ஏத்துக்கவே முடியல என புலம்புகிறார் ஜனனி. அவரை சமாதானப்படுத்தும் மதிவதினி, நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க, நம்ம எப்படியோ அந்த வீடியோவை கண்டுபிடிச்சிடலாம். என்னுடைய கணிப்புப்படி, வெளியாட்கள், யாரும் இதை செய்ய வாய்ப்பில்லை. நிச்சயம் எல்லாம் தெரிஞ்ச ஒரு ஆளா இருக்க தான் வாய்ப்பு இருக்கு என சொல்கிறார்.

55
குழப்பத்தில் ஜனனி

உங்க வீட்டை விட்டு வெளிய அனுப்புன அறிவுக்கரசி, இத வச்சு எதாவது பண்ண சான்ஸ் இருக்கா என மதிவதினி கேட்க, அதற்கு ஜனனி, அவகிட்ட அந்த வீடியோ இல்லை. அப்படியே இருந்தாலும் அவ எதுக்கு அந்த வீடியோவை எனக்கு அனுப்பனும், இது வேறுயாரோ பண்றாங்க. ஆனால் எதுக்குனு தான் புரியல. ஒருவேளை குணசேகரனே இதை பண்ணிருப்பாரானு யோசித்தால் கூட, அவர் இவ்ளோ தூரம் ரிஸ்க் எடுப்பாரா என்று எனக்கு தோணவில்லை. இத்துடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வந்தது. இதையடுத்து என்ன நடந்தது என்பதை இனி வரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories