பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் வைல்டு கார்டு போட்டியாளராக பங்கேற்றவர் விஜே அர்ச்சனா. இளமை புதுமை காலம் முதலே தன்னுடைய சிரித்த முகம் மாறாத புன்னைக்கு பெயர் போன அர்ச்சனாவின் மற்றொரு முகத்தையும் போட்டியாளர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பார்த்தனர்.
அன்பு என்றுமே ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் பிக்பாஸ் வீட்டிற்குள் வளைய வந்த அர்ச்சனா, போட்டி என்று வந்துவிட்டாலோ புலியாக மாறி தூள் கிளப்பி விடுவார். பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய அர்ச்சனாவிற்கு சோசியல் மீடியாக்களில் கலவையான விமர்சனங்கள் எழுந்த போதும், வீட்டில் ஒரு ஸ்பெஷல் பரிசு காத்திருந்தது.
அதாவது அர்ச்சனாவின் தங்கையான அனிதா கர்ப்பமாக இருந்தது தான் அது. தங்கையின் வளைகாப்பு நிகழ்ச்சியையும் செம்ம கிராண்டாக பிக்பாஸ் பிரபலங்களுடன் கொண்டாடினார் அர்ச்சனா.
அனிதாவும் தன்னுடைய கணவருடன் விதவிதமாக pregnancy photshoot-களை எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வந்தார். அந்த புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலானது.
கடந்த ஒருவாரத்திற்கு முன்னதாக அனிதாவிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதையும் அர்ச்சனாவே தன்னுடைய சோசியல் மீடியா பக்கங்களில் அறிவித்திருந்தார். அன்று முதலே ரசிகர்கள் பலரும் குழந்தையின் புகைப்படத்தை பதிவிடும் படி கேட்டு வந்தனர்.
தற்போது குழந்தை பிறந்து ஒரு வாரத்தை கடந்துள்ள நிலையில், குழந்தையின் பிஞ்சு கை மட்டும் தெரியும் படியான க்யூட் புகைப்படம் ஒன்றை அர்ச்சனா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.