ரொமான்டிக்காக காதலர் தினத்தை கொண்டாடிய அர்ச்சனா – அருண் பிரசாத் ஜோடி; வைரல் போட்டோஸ்!

Published : Feb 14, 2025, 03:57 PM IST

அர்ச்சனா ரவிச்சந்திரன் மற்றும் அருண் பிரசாத் இருவரும், காதலர் தினத்தை இணைந்து கொண்டாடியுள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது வைரலாகி வருகிறது.  

PREV
16
ரொமான்டிக்காக காதலர் தினத்தை கொண்டாடிய அர்ச்சனா – அருண் பிரசாத் ஜோடி; வைரல் போட்டோஸ்!
ராஜா ராணி 2

சென்னயில் பிறந்து வளர்ந்தவர் நடிகை அர்ச்சனா ரவிச்சந்திரன். விஜேவாக தொலைக்காட்சியில் அறிமுகமான அர்ச்சனாவிற்கு ராஜா ராணி 2 சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 

சின்னத்திரையில் இவர் நடித்த முதல் சீரியலே இவருக்கு நல்ல அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்த நிலையில், கடந்த ஆண்டு நிறைவடைந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு டைட்டில் வின்னராக மாறினார். 
 

26
டிமாண்டி காலனி 2:

பிக்பாஸ் வாய்ப்புக்கு பின்னர், டிமாண்டி காலனி 2 படத்தில் நடிக்கும் வாய்ப்பு அர்ச்சனாவுக்கு கிடைத்தது. பின்னர் சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படம், டிமாண்டி காலனி 3 ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.  இடையில் சமீபத்தில் முடிவடைந்த பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்சியில் சிறப்பு விருந்தினராக சென்று தன்னுடைய காதலன் அருண் பிரசாத் காலில் விழுந்து ஆசி பெற்றது பார்பவர்களையே பிரமிப்பில் ஆழ்த்தியது. 

பிக் பாஸ் அருண் என்னோட புருஷன்; சொந்தம் கொண்டாடும் பெண்! அப்போ அர்ச்சனா நிலைமை?

36
அர்ச்சனாவால் கிடைத்த பிக்பாஸ் வாய்ப்பு:

பாரதி கண்ணம்மா என்ற சீரியல் மூலமாக புகழ் பெற்ற அருண் பிரசாத், பாண்டியன் ஸ்டோர்ஸ், ராஜா ராணி ஆகிய சீரியல்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார். மேயாத மான், ஜடா உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்துள்ளார். 

அர்ச்சனாவின் சிபாரிசு காரணமாகவே அருண் பிரசாத்துக்கு பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்துள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னதாகவே அருண் பிரசாத் மற்றும் அர்ச்சனா இருவரும் காதலித்து வந்துள்ளனர். ஆனால், அதைப் பற்றி வெளியுலகிற்கு தெரியாமல் இருந்தது.
 

46
தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் மூலமாக காதல் வெளிப்பட்டது :

இதுகுறித்த தகவல் வெளியானாலும் அர்ச்சனா தொடர்ந்து இதனை மறுத்து வந்தார். இந்த நிலையில் தான் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் மூலமாக இருவரும் தங்களது காதலை வெளிப்படுத்தியதோடு, அருண் பிரச்சாத்தின் பெற்றோருக்கும் தெரியப்படுத்தினர். பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வீட்டிற்குள் வந்த அர்ச்சனாவை இவங்க தான் என்னோட ஹார்ட்லி குயின் என தன் காதலி அர்ச்சனாவை அறிமுகப்படுத்திய அருணிடம் இந்த வீட்டுக்குள் உங்க கூட இருப்பேன் என நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை என சொல்லி கண்கலங்கினார் அர்ச்சனா. அதன் பிறகு ஒரு சில அறிவுரைகளை வழங்கினார். நீ எப்போதுமே என்னுடைய ஹீரோ தான் என சொல்லி தன் காதலனுக்காக பாடலும் பாடி அசத்தினார்.

56
பிக் பாஸ் அருண் பிரசாத்:

அதன் பிறகு பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த அருண் பிரசாத், தன்னுடைய காதலியுடன் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தங்களது காதல் குறித்து பேசி வந்தனர். இந்த நிலையில் தான் பிப்ரவரி 14 ஆம் தேதியான இன்று காதலர் தினத்தை முன்னிட்டு டைமஸ் ஆஃப் இந்தியாவிற்கு அளித்த பேட்டியில் இருவரும் தங்களது காதல் குறித்த சில விசயங்களை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

பிக் பாஸ் டைட்டில் வின்னர் அர்ச்சனா உடன் கல்யாணம் எப்போ? அருண் சொன்ன குட் நியூஸ்

66
அர்ச்சனா தான் ரொம்பவே ரொமாண்டிக்:

இருவரில் ரொம்ப ஜாலியான, ஃபன்னியான பேர்ஷன் யார் என்பது குறித்து இருவரும் ஒருவருக்கொருவரை சொல்லிக் கொண்டனர். அர்ச்சனா தான் ரொம்பவே ரொமாண்டிக். என்னுடைய பிறந்தநாளுக்கு அர்ச்சனா வந்து வாழ்த்து சொன்னது ரொம்பவே சர்ப்ரைஸ் ஆக இருந்தது. எங்களுக்கு இடையில் லவ் ரிலேஷன்ஷில் இருவருமே ரொம்பவே உணர்ச்சிப்பூர்வமாக இருக்கும் என்பது போன்று பல விஷயங்களை பகிருந்து கொண்டனர். இந்த் நிகழ்வில் இருவரும் ஒரே நிறத்தில் உடை அணிந்து காதலர் தினத்தை குதூகல படுத்தியுள்ளார். இந்த ஆண்டு இருவரும் திருமண உறவில் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

click me!

Recommended Stories