அர்ஜுன் உருகி உருகி காதலித்த நடிகை; வில்லேஜ் நாயகனுடன் ஓட்டம் பிடித்த சோகம்!

Published : Feb 14, 2025, 03:49 PM IST

ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் சினிமாவில் ஹீரோவாக நடித்தபோது பிரபல நடிகை ஒருவரை காதலித்துள்ளார், அந்த நடிகை யார் என்பதை பற்றி பார்க்கலாம்.

PREV
15
அர்ஜுன் உருகி உருகி காதலித்த நடிகை; வில்லேஜ் நாயகனுடன் ஓட்டம் பிடித்த சோகம்!
ஆக்‌ஷன் கிங் அர்ஜுன்

திருமண பந்தத்தில் இணைந்த காதல் கதைகள் ஏராளம் இருந்தாலும், இணையாத கதைகளும் பல இருக்கின்றன. அண்மையில் கூட நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய ஒன் சைடு லவ் பற்றி பேசி இருந்தார். அதேபோல தமிழ் சினிமாவில் ஆக்‌ஷன் கிங் ஆக வலம் வரும் நடிகர் அர்ஜுனின் முதல் காதல் பற்றி பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அவர் காதலித்த பெண் வேறொரு நடிகருடன் ஓடிப்போய் திருமணம் செய்துகொண்டார். அந்த நடிகை யார் என்பதை பற்றி பார்க்கலாம்.

25
19 வயதில் ஹீரோ ஆன அர்ஜுன்

கன்னடத்தில் சும்ஹாடா மரி என்கிற படம் மூலம் நடிகராக அறிமுகமானார் அர்ஜுன். 19 வயதிலேயே சினிமாவில் ஹீரோவாக எண்ட்ரி கொடுத்த அர்ஜுனுக்கு தமிழில் நன்றி என்கிற படம் தான் முதல் படமாக அமைந்தது. மற்றமொழிகளை காட்டிலும் தமிழ் படங்களிலேயே அவருக்கு வெற்றி கிட்டியதால் தமிழ் மொழியில் தான் அதிக படங்களில் நடித்தார். நடிகராக மட்டுமின்றி இயக்குனராகவும் ஜொலித்த அர்ஜுன், ஜெய்ஹிந்த் உள்பட சில சூப்பர்ஹிட் படங்களை இயக்கி இருக்கிறார்.

இதையும் படியுங்கள்... இதயம் முதல் - இயற்கை வரை! ஒரு தலை காதலால் கொண்டாடப்பட்ட தமிழ் படங்கள்!

35
நளினியை காதலித்த அர்ஜுன்

அர்ஜுனின் முதல்படமான நன்றி படத்தில் ஹீரோயினாக நடித்தவர் நளினி. இதையடுத்து இருவரும் இணைந்து யார், எங்கள் குரல் போன்ற படங்களில் அடுத்தடுத்து நடித்தனர். அப்போது நளினி மீது காதல்வயப்பட்ட அர்ஜுன், தன் காதலை வெளிப்படுத்த கரெக்டான நேரம் வரட்டும் என காத்திருந்தாராம். ஆனால் அந்த சமயத்தில் தான் நளினி, நடிகர் ராமராஜனை காதலிக்கும் விஷயம் அர்ஜுனுக்கு தெரிந்திருக்கிறது. இதனால் அவரின் ஒருதலைக் காதல் தோல்வியில் முடிந்துள்ளது.

45
நிவேதா உடன் திருமணம்

நளினியிடம் காதலை சொல்ல முடியாமல் தவித்து வந்த சமயத்தில் ராமராஜனுடன் ஓடிப்போய் திருமணம் செய்துகொண்டார் நளினி. பின்னர் அவரை மறந்து, கடந்த 1988-ம் ஆண்டு கன்னட நடிகை நிவேதா என்பவரை திருமணம் செய்துகொண்டார் அர்ஜுன். இதுவும் காதல் திருமணம் தான். அர்ஜுனின் மனைவி நிவேதா ஒரு நடிகை மட்டுமல்ல, சிறந்த டான்ஸராகவும், தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார். அர்ஜுன் - நிவேதா ஜோடிக்கு ஐஸ்வர்யா, அஞ்சனா என இரு மகள்கள் உள்ளனர்.

55
அர்ஜுன் பேமிலி

இதில் அர்ஜுனின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கு அண்மையில் திருமணம் ஆனது. அவர் தம்பி ராமையாவின் மகன் உமாபதியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அதேபோல் அர்ஜுனின் இரண்டாவது மகள் அஞ்சனா பிசினஸ் செய்து வருகிறார். அர்ஜுனுக்கு தற்போது வயது 62 ஆனாலும் இன்னும் இளமை மாறாமல் இருப்பதால் அவருக்கு சினிமாவில் பட வாய்ப்புகள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன. அண்மையில் விஜய்க்கு வில்லனாக லியோ படத்திலும், அஜித்துக்கு வில்லனாக விடாமுயற்சி படத்திலும் நடித்திருந்தார் அர்ஜுன்.

இதையும் படியுங்கள்... காதல் வளர்த்த தமிழ் சினிமாவின் சில்லுனு ஒரு காதல் ரீகேப்!

click me!

Recommended Stories