பெங்களூரை சேர்ந்த ரக்ஷிதா, கன்னட சீரியல்களின் மூலம் தன்னுடைய சின்னத்திரை பயணத்தை துவங்கியவர். இதை தொடர்ந்து தமிழில் விஜய் டிவியில் ஒளிபரப்பான 'பிரிவோம் சந்திப்போம்' சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்ட ரக்ஷிதா, இந்த சீரியலின் தன்னுடைய அழகை மறைத்து கொண்டு, கருப்பு நிற ஸ்கின் டோனில் நடித்திருந்தார்.