விஜய் - அஜித் மோதலுடன் ஆரம்பமாகவுள்ள 2023-ம் ஆண்டில் ரிலீசாக உள்ள பிரம்மாண்ட படங்கள் ஒரு பார்வை

First Published | Dec 30, 2022, 2:44 PM IST

புத்தாண்டு பிறக்க உள்ள நிலையில், 2023-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் ரிலீசுக்காக காத்திருக்கும் பிரம்மாண்ட படங்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

தமிழ் சினிமாவுக்கு 2022-ம் ஆண்டு மிகவும் சக்சஸ்புல்லான ஆண்டாக அமைந்தது. கொரோனா பரவலால் கடந்த 2 ஆண்களாக கடும் பாதிப்பை சந்தித்திருந்த தமிழ் சினிமா இந்த ஆண்டு தான் அதிலிருந்து முழுமையாக மீண்டுள்ளது என்றே சொல்லலாம். அதுமட்டுமின்றி இந்த வருடம் ஏராளமான பிளாக்பஸ்டர் ஹிட் படங்களும் தமிழ் சினிமாவில் வந்தன. அதுமட்டுமின்றி விக்ரம், பொன்னியின் செல்வன் போன்ற படங்களின் வெற்றி தமிழ்சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது. 2022-ம் ஆண்டு முடிவுக்கு வந்துள்ள நிலையில், 2023-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் ரிலீசுக்காக காத்திருக்கும் பிரம்மாண்ட படங்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

விஜய் - அஜித் படங்கள் மோதல்

2023-ம் ஆண்டு ஆரம்பமே அமர்க்களமாக இருக்கப்போகிறது என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில் 2023-ம் ஆண்டின் முதல் தமிழ் பண்டிகையான பொங்கலுக்கு விஜய் நடித்துள்ள வாரிசு படமும், அஜித் நடித்துள்ள துணிவு படமும் நேருக்கு நேர் மோத உள்ளனர். 9 ஆண்டுகளுக்கு பின் இருவரது படங்களுக்கு ஒரே நாளில் ரிலீஸாக உள்ளதால், தமிழ் சினிமாவுக்கு இந்த ஆண்டு அட்டகாசமான ஆரம்பமாக இருக்கப்போகிறது என்பதில் சந்தேகம் இல்லை.

Tap to resize

காத்திருக்கும் பெரிய பட்ஜெட் படங்கள்

துணிவு, வாரிசு படங்களைத் தொடர்ந்து 2023-ம் ஆண்டின் முதல் பாதியில் ஏராளமான பெரிய பட்ஜெட் படங்கள் ரிலீசுக்கு காத்திருக்கின்றன. அதன்படி மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் வருகிற ஏப்ரல் மாதம் 28-ந் தேதி ரிலீசாக உள்ளது. அதேபோல் தனுஷ் நடித்துள்ள வாத்தி திரைப்படமும் வருகிற பிப்ரவரி மாதம் 17-ந் தேதி ரிலீசாக உள்ளது.

இதையும் படியுங்கள்... திரிஷாவின் ஆக்‌ஷன் அவதாரம் செட் ஆனதா? இல்லையா? - ராங்கி படத்தின் விமர்சனம் இதோ

இதுதவிர சிம்பு நடிப்பில் உருவாகி உள்ள பத்து தல திரைப்படம் மார்ச் மாதமும், நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் ஏப்ரல் மாதமும், சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படம் பிப்ரவரி மாதமும், ஜெயம் ரவியின் அகிலன் படம் பிப்ரவரி மாதமும், ராகவா லாரன்ஸின் ருத்ரன் திரைப்படம் ஏப்ரல் மாதமும் ரிலீஸ் செய்யப்பட வாய்ப்புள்ளது.

இதுதவிர வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடித்துள்ள விடுதலை படத்தின் முதல் பாகமும், கமல் - ஷங்கர் கூட்டணியில் தயாராகி வரும் இந்தியன் 2 படமும் 2023-ம் ஆண்டின் முதல் பாதியில் ரிலீசாக வாய்ப்புள்ளது. அதேபோல் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் கேப்டன் மில்லர் படம், சிவகார்த்திகேயனின் அயலான்  மற்றும் சியான் விக்ரமின் தங்கலான் ஆகிய படங்களும் விரைவில் திரைக்கும் வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

மற்ற மொழி படங்கள்

2022-ம் ஆண்டில் பான் இந்தியா படங்களுக்கு அதிக மவுசு இருந்தது. அந்த வகையில் 2023-ம் ஆண்டு, ஷாருக்கான் நடித்துள்ள பதான் படம் வருகிற ஜனவரி மாதம் 26-ந் தேதி ரிலீசாக உள்ளது. இதற்கு அடுத்தபடியாக கேஜிஎப் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள சலார் மற்றும் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா நடித்துள்ள ஜவான் படமும் இந்த ஆண்டு ஜூன் மாதம் ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... டேஞ்சர் ஜோனில் 3 பேர்... இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறப்போகும் போட்டியாளர் யார் தெரியுமா?

Latest Videos

click me!