தமிழ் திரையுலகில் 20 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வருவபர் திரிஷா. இவருக்கு வயது 40-ஐ நெருங்கி வந்தாலும், 20 வருடங்களுக்கு முன் எப்படி இருந்தாரோ இன்றளவும் அதேபோன்ற இளமையுடனும் அழகுடனும் இருக்கிறார். அவர் நடிப்பில் தற்போது ரிலீசாகி உள்ள திரைப்படம் ராங்கி. இதில் ஆக்ஷன் ஹீரோயினாக நடித்திருக்கிறார் திரிஷா. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் இன்று திரையரங்குகளில் ரிலீசாகி உள்ளது.
எங்கேயும் எப்போதும், இவன் வேற மாதிரி போன்ற வெற்றிப்படங்களை இயக்கிய சரவணன் தான் இந்த படத்தையும் இயக்கி உள்ளார். இப்படத்திற்கு ஏ.ஆர்.முருகதாஸ் கதை எழுதி உள்ளார். கடந்த 2019-ம் ஆண்டே எடுத்து முடிக்கப்பட்ட இப்படம் நீண்ட நாட்களாக ரிலீசாகாமல் இருந்த நிலையில், தற்போது அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு ஒரு வழியாக ரிலீஸ் ஆகி உள்ளது.
இதற்காக சென்னையில் உள்ள ரோகினி திரையரங்கில் திரிஷாவுக்கு பிரம்மாண்ட கட் அவுட் எல்லாம் வைக்கப்பட்டு இருந்தது. காலையில் திரிஷா தியேட்டருக்கு வந்ததும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து பத்திரிக்கையாளர்கள் கேட்ட சில கேள்விகளுக்கு பதிலளித்தார் திரிஷா. இதையடுத்து உள்ளே படம் பார்க்க சென்றபோது தான் திரிஷாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. தியேட்டரில் கூட்டமே இல்லாமல் பெரும்பாலான இருக்கைகள் காலியாக இருந்ததை பார்த்து திரிஷா அதிர்ச்சி அடைந்துள்ளார்.