திருமுருகன் இயக்கிய நாதஸ்வரம் என்கிற சூப்பர் ஹிட் சீரியலில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஸ்ருதி சண்முகப்பிரியா. இந்த சீரியலில் நாயகனான கோபியின் 4 தங்கைகளுள் ஒருவராக நடித்திருந்தார் ஸ்ருதி. இதையடுத்து வாணி ராணி, கல்யாணப் பரிசு, பொன்னூஞ்சல் போன்ற தொடர்களில் நடித்திருந்த இவர் சில படங்களிலும் சைடு ரோலில் நடித்துள்ளார்.