அந்த வகையில் சமீபத்தில் கூட இவர்கள் இருவருக்கும் வருகிற ஜூன் 9-ந் தேதி திருமணம் நடைபெற இருப்பதாக செய்தி வெளியானது. திருப்பதியில் அவர்களது திருமணம் நடக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. அண்மையில் ஒரு விருது நிகழ்ச்சியில் கூட நடிகை கீர்த்தி சுரேஷ் இந்த தேதியை குறிப்பிட்டு, திருமணம் அன்று தானே என கேட்க, அதற்கு விக்கியும், நயனும் மறுப்பு தெரிவிக்காமல் வெட்கப்பட்டு சிரித்தனர். இதன்மூலமே அவர்களது திருமண தேதி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாக கூறப்பட்டது.