விடுவிக்கப்பட்ட ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான்..விசாரணை அதிகாரி மீது நடவடிக்கை !

First Published May 27, 2022, 6:43 PM IST

ஆர்யன் கான் போதைப்பொருள் வழக்கில் "தரமற்ற விசாரணை"க்காக முன்னாள் NCB மண்டல இயக்குனர் சமீர் வான்கடே மீது கடுமையான நடவடிக்கை எடுக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

aryan khan drugs case

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் சம்மந்தப்பட்ட வழக்கில் மத்திய ஏஜென்சி 6,000 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்த பின்னர், வெள்ளிக்கிழமை போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஆர்யன் கான் என்சிபியால் விடுவிக்கப்பட்டார். இவருக்கு எதிராக எந்தவித ஆதாரமும் நிரூபிக்கப்படவில்லை என குறிப்பிட்டு கோர்ட் ஆர்யன் கானை முழுமையாக விடுவித்து உத்தரவிட்டது.

aryan khan drugs case

இந்த வழக்கு தொடர்பான விசாரணையின் போது ஆர்யன் கானின் வழக்கறிஞர் சதீஷ் மனேஷிண்டே, “ஆர்யன் கானை கைது செய்து 26 நாட்கள் காவலில் வைத்தது நியாயமற்றது, குறிப்பாக அவர் போதைப்பொருள் வைத்திருந்ததாகக் கண்டறியப்படவில்லை. எந்த விதமான ஆதாரமும் இல்லை, எந்த ஒரு சட்டத்தையும் மீறியதற்கான எந்தப் பொருளும் இல்லை, NDPS சட்டமும் மிகக் குறைவு. சஞ்சய் குமார் சிங் தலைமையிலான சிறப்புப் புலனாய்வுக் குழு இந்த வழக்கை புறநிலையாக விசாரித்து, போதிய ஆதாரங்கள் இல்லாததால் ஆர்யன் கான் மீது புகார் அளிக்க வேண்டாம் என்று முடிவு செய்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். என குறிப்பிட்டிருந்தார்.

aryan khan drugs case

இந்நிலையில் சம்பந்தப்பட்ட மும்பை போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக "தரமற்ற விசாரணை"க்காக முன்னாள் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகத்தின் (என்சிபி) அதிகாரி சமீர் வான்கடே மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகம்  பரிந்துரைத்துள்ளதாக தெரிகிறது. இவர் ஏற்கனவே போலி சான்றிதழ் வழக்கு நிலுவையில் உள்ளது. சமீர் வான்கடே தான்  போதை பொருள் பயன்படுத்தப்பட்டதாக சொல்லப்படும் கப்பலில் இருந்து ஆர்யன்கானை நேரடி சாட்சியாக இருந்து கைது செய்தவர்.

sameer wankhede

கடந்த ஆண்டு,தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர்  நவாப் மாலிக், சமீர் வான்கடே மீது ஜாதிச் சான்றிதழ் மோசடி குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அதாவது வான்கடே ஒரு முஸ்லிமாக பிறந்தார், ஆனால் அவரது ஜாதிச் சான்றிதழைப் போலியாக உருவாக்கி சிவில் சர்வீசஸ்களில் சேருவதற்காக பட்டியலிடப்பட்ட சாதியினருக்கு (SC) ஒதுக்கப்பட்ட இடத்தைப் பயன்படுத்தினார் என குறிப்பிட்டிருந்தார்.. இருப்பினும், சமீர் வான்கடே மற்றும் அவரது குடும்பத்தினர் குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்று கூறியுள்ளனர்.

click me!