வித விதமான போஸ்டருடன் மாஸ் காட்டும் அருண்விஜய்யின் யானை!

Kanmani P   | Asianet News
Published : May 27, 2022, 04:11 PM IST

அருண் விஜய்யின் 'யானை' படத்தின் புதிய போஸ்டர்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

PREV
14
வித விதமான போஸ்டருடன் மாஸ் காட்டும் அருண்விஜய்யின் யானை!
yaanai

நடிகர் அருண் விஜய் கடைசியாக ஏப்ரல் 21 ஆம் தேதி OTT இல் வெளியான 'ஓ மை டாக்' படத்தை  இப்போது தனது அடுத்த படமான ' யானை ' வெளியீட்டிற்காக காத்திருக்கிறது. இந்த படம் வரும் ஜூன் 17 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. 

24
yaanai

சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்திற்கு எதிராக வெளியான இந்த திரைப்படம், நீண்ட தாமதம் மற்றும் ரிலீஸ் தேதியில் பல மாற்றங்களுக்குப் பிறகு, இறுதியாக பெரிய திரைக்கு வருகிறது. இயக்குனர் ஹரி இயக்கத்தில் , அருண் விஜய், ப்ரியா பவானி சங்கர் , ராதிகா சரத்குமார் , சமுத்திரக்கனி, அம்மு அபிராமி , யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர். 

34
yaanai

இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார் .கிராமத்து பின்னணியில் உருவாகியுள்ள இப்படத்தின் கதை முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாக உருவாகியுள்ளது. இதற்கிடையில், படத்தின் புதிய போஸ்டர்கள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. ரசிகர்கள் உற்சாகமாகவும் ஆர்வமாகவும் போஸ்டரைப் பகிர்ந்து வருகின்றனர்.

44
yaanai

இப்படம் தெலுங்கிலும் ‘எனுகு’ என்ற பெயரில் வெளியாக உள்ளது. 2018 ஆம் ஆண்டு தனது கடைசிப் படமான 'சாமி 2' படத்திற்குப் பிறகு இயக்குனர் ஹரியின் மறுபிரவேசமாக 'யானை'  உருவாகியுள்ளது. 4 வருட இடைவெளியில், இயக்குனரின் படத்திற்கு பார்வையாளர்களிடம் அதிக எதிர்பார்ப்பு உள்ளது. 'சாமி', 'சிங்கம்', 'சிங்கம் 2', 'சிங்கம் 3' என பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் ஹரி.

click me!

Recommended Stories