Bhagyaraj movie : அட...81 நிமிடத்தில் எடுத்த படமா!! உலக சாதனைக்கு பரிந்துரைக்கப்பட்ட பாக்கியராஜ் படம்..

First Published Dec 26, 2021, 1:30 PM IST

Bhagyaraj movie  : இயக்குநர் பாக்யராஜ் கதாநாயகனாக நடிக்கும் 3.6.9 திரைப்படத்தின் படப்பிடிப்பு கின்னஸ் உலக சாதனைக்காக 81 நிமிடம் தொடர்ந்து படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.

bhagyaraj movie

bhagyaraj movie : 1977-ஆம் ஆண்டில் இயக்குனர் பாரதிராஜாவின் முதல் படமான 16 வயதினிலேவில் உதவியாளராக, தமது திரை வாழ்க்கையை துவங்கினார். பின் பாரதிராஜாவின் இரண்டாவது படமான கிழக்கே போகும் ரயில் திரைப்படத்தில் உதவி இயக்குனர் மற்றும் கவுண்டமணியுடன் ஒரே ஒரு காட்சியில் தோன்றி நடித்திருந்தார்.

bhagyaraj movie

bhagyaraj movie : தனது அடுத்த படமான புதிய வார்ப்புகள் படத்தில் பாரதிராஜா, பாக்யராஜை வசனகர்த்தாவாக மட்டுமன்றி, கதாநாயகனாகவே அறிமுகம் செய்தார்.ஒரு இயக்குனராக தமது முதல் படமாக பாக்யராஜ் உருவாக்கியது சுவர் இல்லாத சித்திரங்கள்  
 

bhagyaraj movie

bhagyaraj movie : அடுத்து, சொந்த தயாரிப்பான ஒரு கை ஓசை திரைப்படம் துவங்கி தனது முத்திரையை பதிக்கத் தொடங்கினார்.அஸ்வினி இணைந்து நடித்த இப்படத்தில் அவர் வாய் பேச இயலாத ஊமைக் கதாநாயகனாக மேற்கொண்ட பாத்திரம் இரசிகர்களின் மனம் கவர்ந்தது

bhagyaraj movie

bhagyaraj movie : மௌன கீதங்கள், இன்று போய் நாளை வா ஆகியவை பாக்யராஜின் முத்திரையை முழுமையாகக் கொண்டு வெற்றிப் படங்களாயின. அடுத்து மர்மங்கள் மற்றும் அதிரடி கொண்ட அதேசமயம், விடியும் வரை காத்திரு அந்த 7 நாட்கள், தூறல் நின்னு போச்சு போன்றவை கருதப்படுகின்றன.

bhagyaraj movie

bhagyaraj movie : டார்லிங், டார்லிங், டார்லிங் வெற்றிப்படத்தை இயக்கி அதில் நடித்த பூர்ணிமாவை மனைவியாக ஏற்றுக் கொண்டார் பாக்கியராஜ். பின், 1982 ம் ஆண்டு வெளியான முந்தானை முடிச்சு. ஊர்வசி அறிமுகமான இத்திரைப்படம் சென்னையிலும், தமிழ்நாட்டின் பிற பகுதிகளிலும் வெள்ளி விழா கொண்டாடியது.

bhagyaraj movie

bhagyaraj movie : நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் பாக்கியராஜ் கதாநாயகன் அவதாரம் எடுத்துள்ளார். இவர் சமீபத்தில் இயக்குநர் சிவ மாதவ் இயக்கத்தில் 3.6.9 என்னும் படத்தில் நடித்துள்ளார். 

bhagyaraj movie

bhagyaraj movie : வில்லன் கதாபாத்திரத்தில் படத்தின் தயாரிப்பாளர் பிஜிஎஸ் நடத்துள்ளார். ஒளிப்பதிவு மாரிஸ்வரன், இசை கார்த்திக் ஹர்ஷா, பட தொகுதி ஆர். கே. ஸ்ரீநாத், கலை இயக்கம் ஸ்ரீமன் பாலாஜி ஆகியோர் 3.6.9 படத்தில் பணிபுரிந்துள்ளனர்.

bhagyaraj movie

bhagyaraj movie : உலக சினிமா வரலாற்றில் 81 நிமிடங்கள் தொடர்ச்சியாக இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.  இப்படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரி அடுத்த கிருமாம்பாக்கம் பிள்ளையார்குப்பத்தில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் டிச. 15-ம் தேதி படமாக்கப்பட்டது.

bhagyaraj movie

bhagyaraj movie : ஒரே நேரத்தில், ஒரு களத்தில் 24 கேமராக்கள், 150க்கும் மேற்பட்ட நடிகர், நடிகைள், 450 பணியாளர்களை கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. நாலேஜ் இன்ஜினியரிங் என்ற அமைப்பின் நிறுவனர் ஹரிபா ஹனிப் நடுவராக இருந்து 81 நிமிடங்களில் படமாக்கப்பட்ட இத்திரைப்படத்தின் உருவாகத்தை நேரடியாக பார்வையிட்டு, அமெரிக்காவை தலையிடமாக கொண்டு செயல்படும் வேர்ல்டு ரெக்கார்டு யூனியன் என்ற அமைப்பிற்கு உலக சாதனைக்கு பரிந்துரை செய்துள்ளார்.

click me!