Samantha : 8 மாசத்துல 120 கோடி வருமானம்... சினிமாவை விட பிசினஸில் கொடிகட்டிப்பறக்கும் சமந்தா

Published : Nov 02, 2026, 05:34 PM IST

Samantha Business Success : நடிகை சமந்தா தற்போது சினிமாவில் பிசியாக இல்லாவிட்டாலும், அவர் பிசினஸில் கொடிகட்டிப்பறந்து வருகிறார். அதைப்பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

PREV
14
பிசினஸில் கெத்து காட்டும் சமந்தா

தென்னிந்திய சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் நடிகை சமந்தா. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பல வெற்றிப் படங்களில் நடித்து பிரபலமான இவர், தற்போது சினிமாவைத் தாண்டியும் தனது கவனத்தை விரிவுபடுத்தி வருகிறார். நடிப்புடன் சேர்த்து தொழில்முனைவிலும் ஆர்வம் காட்டி வரும் சமந்தா, அடுத்தடுத்து புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.

அந்த வகையில், சமந்தா தனது கூட்டாளர்களுடன் இணைந்து தொடங்கியுள்ள சீக்ரெட் ஆல்கெமிஸ்ட் (Secret Alchemist) என்ற வாசனை திரவிய நிறுவனம் தற்போது பேசுபொருளாகியுள்ளது. இந்த நிறுவனம் தொடங்கப்பட்ட எட்டு மாதங்களிலேயே சுமார் ரூ.120 கோடி வருவாய் ஈட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த செய்தி தற்போது ரசிகர்கள் மத்தியிலும் தொழில்துறையினர் மத்தியிலும் கவனத்தைப் பெற்றுள்ளது.

சமந்தா ஏற்கெனவே ஷகி என்ற ஆடை நிறுவனத்தின் மூலமாகவும், ட்ராலாலா மூவிங் பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலமாகவும் தொழில்முனைவில் தனது ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளார். இந்நிலையில், தற்போது வாசனை திரவியங்கள் மற்றும் அழகு சார்ந்த தயாரிப்புகள் விற்பனையிலும் அவர் களமிறங்கியுள்ளார்.

24
சீக்ரெட் ஆல்கெமிஸ்ட் நிறுவனத்தை தொடங்கியதன் பின்னணி என்ன?

வாசனை திரவியங்கள் மற்றும் அழகு சாதனப் பொருட்களில் பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் குறித்து சமந்தாவுக்கு சில சந்தேகங்கள் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, சுமார் இரண்டு ஆண்டுகள் இத்தகைய தயாரிப்புகளைப் பயன்படுத்துவதைத் தவிர்த்த அவர், இயற்கையான மூலப்பொருட்களைக் கொண்டு நறுமணப் பொருட்களை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தை வளர்த்துக்கொண்டதாகத் தெரிகிறது.

அந்த எண்ணத்தின் அடிப்படையில் அங்கிதா ததானி மற்றும் ஆகாஷ் வாலியா ஆகியோருடன் இணைந்து சீக்ரெட் ஆல்கெமிஸ்ட் நிறுவனத்தை அவர் உருவாக்கியுள்ளார். இயற்கை சார்ந்த நறுமண அனுபவத்தையும் தனித்துவமான தயாரிப்புகளையும் மையமாகக் கொண்டு இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

34
8 மாதங்களில் ரூ.120 கோடி வருவாய்

தற்போது இந்த நிறுவனத்தின் வளர்ச்சி குறித்துப் வெளியாகியுள்ள தகவல்தான் பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. நிறுவனம் தொடங்கப்பட்டு வெறும் எட்டு மாதங்களுக்குள் ரூ.120 கோடி வருவாய் கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. குறுகிய காலத்தில் இவ்வளவு பெரிய தொகையை நிறுவனம் ஈட்டியிருப்பதாக வெளியாகியுள்ள தகவல் சமூக வலைதளங்களிலும் கவனம் பெற்றுள்ளது.

44
சினிமாவைத் தாண்டி பல துறைகளில் சமந்தா!

நடிப்பைத் தாண்டி தொழில் முயற்சிகளிலும் தொடர்ந்து ஆர்வம் காட்டி வரும் சமந்தா, தனது தயாரிப்பு நிறுவனம் மற்றும் ஆடை வணிகத்தைத் தொடர்ந்து தற்போது வாசனை திரவியத் துறையிலும் கவனம் செலுத்தி வருகிறார். அதேசமயம், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று ரசிகர்களுடன் தொடர்பில் இருந்து வருகிறார். குறிப்பாக 'செலிபிரிட்டி மாஸ்டர் செஃப்' நிகழ்ச்சியின் மூலமாகவும் அவர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தார்.

ஒருபுறம் திரைப்படங்கள், மறுபுறம் தயாரிப்பு நிறுவனம், ஆடை வணிகம் எனப் பல்வேறு தளங்களில் பயணித்து வரும் சமந்தாவின் புதிய தொழில் முயற்சியான சீக்ரெட் ஆல்கெமிஸ்ட் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. எட்டு மாதங்களில் ரூ.120 கோடி வருவாய் ஈட்டியதாக கூறப்படுவதால் சமந்தாவின் பிசினஸில் இது மிகப்பெரிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories