Bigg Boss 10 : மெண்டல் என திட்டிய ஜேசன்... கோபத்தின் உச்சிக்கே சென்ற முனியம்மாள் - பிக் பாஸ் வீட்டில் பரபரப்பு!

Published : Nov 02, 2026, 03:59 PM IST

Fight Between Muniyammal and Jason : பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் முனியம்மாள் மற்றும் ஜேசன் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதைப்பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

PREV
14
Bigg Boss Tamil Season 10

தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் தமிழ் சீசன் 10, விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த செப்டம்பர் 6, அன்று தொடங்கிய இந்நிகழ்ச்சி தற்போது எட்டு வாரங்களைக் கடந்து ஒன்பதாவது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. ஒவ்வொரு வாரமும் போட்டியாளர்களுக்கு இடையே உருவாகும் கருத்து வேறுபாடுகளும், சண்டைகளும் நிகழ்ச்சியின் சுவாரஸ்யத்தை அதிகரித்து வருகின்றன.

அந்த வகையில், நேற்று நடைபெற்ற எவிக்ஷன் சுற்றில் கரீஷ்மா பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். இதற்கிடையில், டிடிஎஃப் வாசன் தனக்கு வழங்கப்பட்ட எவிக்ஷன் ப்ரீ பாஸைப் பயன்படுத்தி முகேஷை வெளியேற்றத்திலிருந்து காப்பாற்றினார். அவரது இந்த முடிவு டிடிஎஃப் வாசனின் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியையும், விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது.

24
முனியம்மாள் – ஜேசன் இடையே நேருக்கு நேர் மோதல்!

இந்நிலையில், இன்று வெளியான பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரோமோவில் முனியம்மாள் மற்றும் ஜேசன் இடையே கடுமையான வாக்குவாதம் நடைபெறுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. புரோமோவின் தொடக்கத்தில் போட்டியாளர்கள் அனைவரும் லிவ்விங் அறையில் அமர்ந்திருக்கின்றனர். அப்போது முனியம்மாள், ஜேசனைப் பார்த்து அவர்தான் இந்த வீட்டின் பாஸ் போல நடந்துகொள்கிறார் என்ற கருத்தில் பேசுகிறார். இதற்கு உடனடியாக பதிலளித்த ஜேசன், முனியம்மாளை 'மெண்டல்' என்று கூறுகிறார். இதனால் ஆத்திரமடைந்த முனியம்மாள் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபடத் தொடங்குகிறார்.

34
ஜேசனின் அடாவடித்தனம்

இந்தச் சூழலில் சாதிகாவும் தலையிட்டு, முனியம்மாளை மெண்டல் என்று அழைத்தது தவறு என ஜேசனிடம் சுட்டிக்காட்டுகிறார். ஆனால் அதனை ஏற்க மறுக்கும் ஜேசன், முனியம்மாள் தன்னிடம் நக்கலாகப் பேசினால் தானும் அதே விதமாகத்தான் பதிலளிப்பேன் எனக் கூறுகிறார். இதையடுத்து இருவருக்கும் இடையேயான வாக்குவாதம் மேலும் தீவிரமடைகிறது. முனியம்மாளிடம் தொடர்ந்து கேள்விகளை எழுப்பும் ஜேசனுக்கு அவரும் சளைக்காமல் பதிலடி கொடுக்கிறார்.

எல்லாமே அவர் நினைத்தபடிதான் நடக்க வேண்டும் என்றால், அவர்தான் இந்த வீட்டின் பாஸ் என்று முனியம்மாள் கூறி தனது எதிர்ப்பை வெளிப்படுத்துகிறார். இதனால் பிக் பாஸ் வீட்டில் மீண்டும் ஒரு புதிய மோதல் உருவாகியுள்ளது. இந்த விவகாரம் மற்ற போட்டியாளர்கள் மத்தியிலும் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்துள்ளது.

44
ஒன்பதாவது வாரத்தில் என்ன நடக்கப்போகிறது?

ஏற்கனவே எட்டாவது வாரத்தில் கரீஷ்மா வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், ஒன்பதாவது வாரத்திற்கான நாமினேஷன் பட்டியல் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. இதற்கிடையில், முனியம்மாள் – ஜேசன் இடையேயான மோதல் இந்த வார நிகழ்ச்சியில் முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளது. தொடர்ந்து போட்டியாளர்களுக்கு இடையே உருவாகும் புதிய சண்டைகள், சவாலான டாஸ்க்குகள் என ஒன்பதாவது வாரமும் பரபரப்பாக நகரும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Bigg Boss-ல் விஜய் சேதுபதியை விட ரம்யா கிருஷ்ணனுக்கு அதிக சம்பளமா? அடேங்கப்பா ஒரு எபிசோடுக்கு இவ்வளவா?

Read more Photos on
click me!

Recommended Stories