பின்னர் சீரியலில் இருந்து முழுமையாக விலகி, வெள்ளித்திரை வாய்ப்புகளை தேட துவங்கினார். இப்படி ஆரம்பத்தில் இவர் நடிப்பில் வெளியான சில படங்கள், பெரிய அளவிற்கு பேசப்படவில்லை என்றாலும், அஷோக் செல்வன் நடித்த 'ஓ மை கடவுளே' திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. கதாநாயகியான, ரித்திகா சிங்கை விட, பலர் வாணி போஜன் நடிப்பை தான் வெகுவாக பாராட்டி இருந்தனர்.