தமிழ் திரையுலகில் டாப் ஹீரோவாக வலம் வந்துகொண்டிருக்கிறார் சூர்யா. ஆரம்பத்தில் நடிக்கவே தெரியாமல் இருந்த சூர்யா, பின்னர் பாலா, கவுதம் மேனன், ஏ.ஆர்.முருகதாஸ் என தொடர்ந்து பல்வேறு தரமான இயக்குனர்களுடன் பணியாற்றி தனது நடிப்புத் திறமையை வளர்த்துக் கொண்டு இன்று தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நாயகனாக உயர்ந்து நிற்கிறார். அவரது நடிப்பை பாராட்டி நடிப்பின் நாயகன் என்கிற செல்லப் பெயரையும் சம்பாதித்து வைத்திருக்கிறார்.