கலக்கப்போவது யாரு, அது இது எது போன்ற காமெடி நிகழ்ச்சிகளில் மிமிக்ரி செய்து பிரபலமானவர் ரோபோ சங்கர். இதன்மூலம் கிடைத்த புகழ் வெளிச்சம் காரணமாக சினிமாவிலும் ரோபோ சங்கருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. அந்த வகையில் தனுஷ் உடன் மாரி, அஜித்தின் விஸ்வாசம் போன்ற படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து அசத்தி இருந்தார் ரோபோ சங்கர். இவரின் மகள் இந்திரஜாவும் சினிமாவில் நடித்து வருகிறார்.
நடிகர் ரோபோ சங்கர் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது அவரின் தோற்றம் தான். நன்கு கட்டுமஸ்தான் உடற்கட்டுடன் இருந்து வந்த ரோபோ சங்கர், சமீப காலமாக மிகவும் மெலிந்த நிலையில் காட்சி அளித்ததை பார்த்து பலரும் அதிர்ச்சி அடைந்தனர். அவர் உடல் எடை குறைந்தது ஏன் என தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர். அவருக்கு ஏதேனும் நோய் பாதிப்பு இருக்கிறதா எனவும் கேட்டு வந்தனர். பின்னர் அவர் ஒரு படத்துக்காக உடல் எடையை குறைத்துள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
இதையும் படியுங்கள்... உறைய வைக்கும் குளிரில் உள்ளாடை மட்டும் அணிந்து கவர்ச்சி குளியல் போட்ட ரகுல் ப்ரீத் சிங் - வைரலாகும் வீடியோ
இந்நிலையில், தற்போது சர்ச்சைக்குரிய சினிமா பத்திரிகையாளரும், நடிகருமான பயில்வான் ரங்கநாதன், ரோபோ சங்கரின் உடல் நிலை இப்படி ஆனதற்கான ஷாக்கிங் தகவலை வெளியிட்டுள்ளார். அதன்படி, அவர் கூறியதாவது : “சினிமா நடிகர்கள் பலருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாகவே இருக்கிறது. அன்றைய காலகட்டத்தில் சிவாஜி, ஜெமினி கணேசன் போன்ற நடிகர்கள் உடல் எடையை குறைக்க எந்தவித ரசாயன பொருட்களைப் உட்கொள்ளாமல் தகுந்த உடற்பயிற்சி செய்து குறைத்தார்கள்.
அண்மையில் ரோபோ சங்கர் உடல் எடை குறைந்த நிலையில் இருக்கும் போட்டோ பார்த்து அதிர்ந்து போனேன். ரோபோ சங்கர் மிமிக்ரி கலைஞராக இருக்கும்போதிலிருந்தே எனக்கு தெரியும். அந்த சமயத்தில் அவர் நன்றாக ஒர்க் அவுட் செய்து உடலை கட்டுக்கோப்பாக பார்த்துக்கொண்டார். அவர் பிரபலமான பின்னர் சேரக்கூடாத நண்பர்களுடன் சேர்ந்து மதுவுக்கு அடிமையானார்.