உறைய வைக்கும் குளிரில் உள்ளாடை மட்டும் அணிந்து கவர்ச்சி குளியல் போட்ட ரகுல் ப்ரீத் சிங் - வைரலாகும் வீடியோ
நடிகை ரகுல் ப்ரீத் சிங் உறைய வைக்கும் குளிரில் பிகினி உடை மட்டும் அணிந்து குளிக்கும் வீடியோ வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
கவுதம் கார்த்திக் ஜோடியாக என்னமோ ஏதோ திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங். இதையடுத்து கார்த்தி உடன் தேவ், சூர்யா ஜோடியாக என்.ஜி.கே போன்ற படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். இவர் தமிழ் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் தற்போது தமிழில் அயலான் மற்றும் இந்தியன் 2 போன்ற பிரம்மாண்ட திரைப்படங்கள் தயாராகி வருகின்றன.
இதில் அயலான் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் ரகுல் ப்ரீத் சிங். இப்படத்தை ரவிக்குமார் இயக்கி உள்ளார். இப்படம் வருகிற தீபாவளி பண்டிகைக்கு ரிலீஸ் ஆக உள்ளது. அதேபோல் அவர் கைவசம் உள்ள மற்றுமொரு பிரம்மாண்ட திரைப்படம் இந்தியன் 2. ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் ரகுல் ப்ரீத் சிங்கும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.
இதையும் படியுங்கள்... பயங்கர விபத்து... டிவைடரில் மோதிய கார் - சூப்பர் சிங்கர் ரக்ஷிதாவுக்கு என்னாச்சு? பதறிப்போன ரசிகர்கள்
இப்படி இரண்டு பிரம்மாண்ட படங்களை கைவசம் வைத்துள்ள நடிகை ரகுல் ப்ரீத் சிங், சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில் இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிட்டுள்ள வீடியோ தான் தற்போது செம்ம டிரெண்டாகி வருகிறது. அதில் சுற்றிலும் வெண்பனியால் சூழப்பட்ட குளிர் பிரதேசத்தில் பிகினி உடை அணிந்து நடிகை ரகுல் ப்ரீத் சிங் குளிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
மைனஸ் 15 டிகிரி குளிரில் அவர் இப்படி குளித்ததற்கு காரணம், அது ஒருவகையான சிகிச்சையாம். க்ரயோதெரபி எனப்படும் அந்த சிகிச்சையை மேற்கொள்ளவே அவர் இப்படி உறைய வைக்கும் குளிரில் குளித்துள்ளாராம். இந்த வீடியோ காட்சிகளை பார்த்த ரசிகர்கள் இப்படி ஒரு சிகிச்சை முறையா என ஆச்சர்யத்துடன் பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... மகள் இயக்கும் லால் சலாம் படத்துக்காக ‘மொய்தீன் பாய்’ ஆக மாறிய ரஜினிகாந்த் - ட்ரோல் செய்யப்படும் பர்ஸ்ட் லுக்