தமிழ் சினிமாவில் பன்முகத்திறமை கொண்ட வித்தகனாக திகழ்ந்து வருபவர் கமல்ஹாசன். சினிமாவில் இவருக்கு தெரியாத விஷயங்களே இல்லை என சொல்லும் அளவுக்கு நடிப்பு, இசை, இயக்கம், நடனம் என எல்லா ஏரியாவிலும் சிறந்து விளங்கியவர் கமல். சினிமாவில் புதுப்புது தொழில்நுட்பங்களை புகுத்துவதிலும் கமல் வல்லவர். சிறுவயது முதலே சினிமாவில் நடித்து வரும் கமல்ஹாசன் இன்றளவும் பிசியான நடிகராக வலம் வருகிறார் என்றால் அது சினிமாவின் மீது அவர் வைத்திருக்கும் காதலுக்கு எடுத்துக்காட்டு.