தமிழ் சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் நடிகர் விஜய்யின் லியோவும் ஒன்று. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தை செவன் ஸ்கிரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தின் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடித்து வருகிறார். மேலும் மிஷ்கின், சாண்டி, பிரியா ஆனந்த், கவுதம் மேனன், அர்ஜுன், மன்சூர் அலிகான், பிக்பாஸ் ஜனனி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடிக்கிறது.